யாழ் மாநகர சபையின் பதில் முதல்வராக ஈசன் - பொறுப்புக்களை ஒப்படைத்த ஆர்னோல்ட் - Yarl Voice யாழ் மாநகர சபையின் பதில் முதல்வராக ஈசன் - பொறுப்புக்களை ஒப்படைத்த ஆர்னோல்ட் - Yarl Voice

யாழ் மாநகர சபையின் பதில் முதல்வராக ஈசன் - பொறுப்புக்களை ஒப்படைத்த ஆர்னோல்ட்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் யாழ் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் இரண்டு மாதங்களுக்கு பின்பு இன்றையதினம் தன்னிடம் அனைத்து பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார் என யாழ் மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசன் தெரிவீத்துள்ளார்.
[ads id="ads1"]
இன்றையதினம் யாழ். மாநகர சபையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே து.ஈசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்...

யாழ் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதனால், இன்றையதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து தனக்கு கீழ் உள்ள  அதிகாரங்கள் அனைத்தையும் பதில் முதல்வராக என்னிடம் ஒப்படைத்துள்ளார்.

மார்ச் மாதம் 17 ஆம் திகதி நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலே முதல்வர் இ.ஆனல்ட் தனது வேட்புமனுவிலே ஒப்பமிட்டதன் பின்பும் தன்னுடைய அதிகாரங்கள் ஊடாக,

அதாவது அதிலே சொல்லப்பட்ட விடையம் என்னவென்றால் முதல்வர் முதல்வராகவே இருந்துகொண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம், அந்த சட்டதிட்டங்கள் எங்களுக்கும் தெரியும் அவர் செய்ததும் சரியானது.

இப்படியாக தொடர்ச்சியாக முதல்வர் செயற்படும் போது தேர்தல் திணைக்களத்தினால் மூன்று கடிதங்கள் மாநகர சபைக்கு வந்துள்ளது. உடனடியாக நீங்கள் விடுமுறையினை பெற்று உங்களுடைய கடமைகளை ஒப்படைத்து இந்த பணியை ஆற்ற உதவி செய்யுமாறு கேட்டு கடிதம் வந்துள்ளது.

இதற்கமைவாக இரண்டு மாதங்களுக்கு பின்பு இன்றையதினம் பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் முதல்வர் முதல்வராக செயற்பட்டது உண்மை, நான் பிரதி முதல்வராகத்தான் செயற்பட்டிருந்தேர்.

ஆனால் முதல்வர் எந்த விடையங்களை செய்ய வேண்டுமோ அந்த விடையங்களை செய்துவிட்டார். தன்னுடைய வாகனங்கள் உள்ளிட்ட சகலதையும் ஒப்படைத்து விட்டு சென்றிருந்தார்.

அதற்கு பின்பு உறுப்பினர்கள் மற்று மக்கள் அடுத்து நீங்கள் தானே என்ன செய்யப் போகின்றீர்கள் என என்னை  கேட்பார்கள். ஆனால் முதல்வர் முதல்வராக இருந்த காரனத்தினால் என்னால சில செயற்பாடுகளை செய்வதற்கு பல தடைகள் இருந்தது.

உதாரணமாக ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்த போது மக்களுக்கு செய்யவேண்டிய தண்னீர்  பிரச்சினை உள்ளிட்ட சகல ஏற்பாடுகளையும் உன்னிப்பாக பார்த்துது செய்திருந்தேன்.

நீங்கள் அறிந்திருப்பீர்கள் முதன் முதலில் நிவாரண பணியை மாநகரத்தில் ஆரம்பித்து வைத்தது நான்தான். இந்த நிவாரண பணிகளை முன்னெடுக்கும் போது காவற்துறையினருக்கு தெரியும் நான் பிரதி முதல்வர் என ஆனால் விசேட அதிரடிப்படையினருக்கோ, இரானுவத்திற்கோ தெரியாது.

நான் என்னுடைய மோட்டார் சைக்கிலில் செல்லும் போது எனக்கு பல தடைகள் ஏற்பட்டது. பெரும் சிரமத்தின் மத்தியில் தான் நான் இவ் விடையங்களை செய்து முடித்தேன்.

இந்த விடையம் எனக்கு மன தாக்கத்தை ஏற்படுத்தியது,  23 மாநகர சபைகளில் 22 மாநகர சபைகளில் பிரதி முதல்வருக்குரிய வசதி வாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளது.

இந்து சட்ட சிக்கல்கள் காரணமாக செய்ய முடியவில்லை அது ஒரு துரதிஸ்டம். தற்போது முதல்வர் எனக்கு பூரன அதிகாரங்களை ஒப்படைத்துள்ளார்.

 கடந்த மாதம் 21 ஆம் திகதி சபையின் கூட்டத்தை கூட்டுமாறு முதல்வரினால் எனக்கு கடிதம் வழங்கப்பட்டது. அதில் உண்மைத் தன்மை என்னவெற்றால் அந்த கூட்டம் கூட்டுவதற்கும், நடத்துவதுக்கும் பதில் முதல்வருக்கு சட்டத்தில் இடம் உன்டு.

ஆனால் பிழையாக அதனை எடுத்துக் கொண்டுவிட்டார்கள் உண்மையில் முதல்வர் கடிதம் தராமலேயே கூட்டத்தை நடத்துவதற்கு அதிகாரங்கள் இருக்கின்றது.

அந்த கூட்டத்தில் மக்களுக்கான நிவாரண பணியை செய்வதற்காக எடுக்கப்பட்ட தீர்மாணங்கள். அதாவது மக்களுக்கு நிவாரணங்களை வளங்கவேண்டும் என மாநகர சபை உறுப்பினர்  கிருபாகரன் முன்மொழிய என்னால் கொண்டுவந்த தீர்மானத்தை தர்சானந் வளிமொழிந்திருந்தார். குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியும் இருக்கின்றோம்.

எங்களுடைய ஆணையாளர்கூறியிருந்தார் ஆளுநருடைய அறிவித்தலின் படி நிவாரண பணியை முன்னெடுக்க முடியாது என. ஆனால் எங்களுடைய மாநகர கட்டளை சட்டத்தின்படி பசி, பட்டினி, தீராத நோய்  போன்ற ஒரு நிலமை நடைபெறுமாக இருந்தால் நிவாரண பணிகளை முன்னெடுக்க முடியும் கூறுகின்றது.
[ads id="ads2"]
இந்த விடையங்களை வைத்துக்கொண்டு கடிதங்களை அனுப்புமாறு பணித்திருந்தோம். அந்த கூட்டம் துரதிஸ்ட வசமாக முடிவற்ற விதத்திலே சென்னுவிட்டது. அதனால் சபையினை ஒத்திவைத்துவிட்டோம்.

தற்போது முதல்வரால்  எனக்கு பூரண அதிகாரம் தரப்பட்டு சகலதையும் ஒப்படைத்துள்ளார். இனிவரும் காலங்களிலே கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று அனைத்து உறுப்பினர்களுடனும்  இனைந்து மாநகர மக்களுக்காக சேவையாற்ற தோளமையுடன் கைகோர்த்து செய்யவேண்டும். என து.ஈசன் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post