மகிந்தவின் கூட்டத்தில் ஐ.தே.க கலந்து கொள்ளாது - செயலாளர் அகிலவிராஐ் அறிவிப்பு - Yarl Voice மகிந்தவின் கூட்டத்தில் ஐ.தே.க கலந்து கொள்ளாது - செயலாளர் அகிலவிராஐ் அறிவிப்பு - Yarl Voice

மகிந்தவின் கூட்டத்தில் ஐ.தே.க கலந்து கொள்ளாது - செயலாளர் அகிலவிராஐ் அறிவிப்பு

பிரமதர் மகிந்த ராஐபக்சவின் நாளைய கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்து கொள்ளாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் இவ்வாறு தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது முகநுாலில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் நாளை திங்கட்கிழமை அலரிமாளிகையில் இடம்பெறும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தக் கூட்டத்தில் சில கட்சிகள் கலந்த கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளையில் சில கட்சிகள் கலந்து கொள்ளப்டிபோதில்லை என அறிவித்திருந்தது.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக முன்னர் அறிவித்து இருந்த நிலையிலையே தற்பொது அக் கட்சி கலந்த கொள்ளாது என கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post