மகிந்தவிடம் சுமந்திரன் விடுத்துள்ள கோரிக்கை - உறுதியளித்த மகிந்த - Yarl Voice மகிந்தவிடம் சுமந்திரன் விடுத்துள்ள கோரிக்கை - உறுதியளித்த மகிந்த - Yarl Voice

மகிந்தவிடம் சுமந்திரன் விடுத்துள்ள கோரிக்கை - உறுதியளித்த மகிந்த


தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ்மாவட்ட  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரன் அவர்களுக்கும் பிரதமர் மஹிந்தராஜபக்ச அவர்களிற்குமிடையிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொழும்பிலுள்ள பிரதமரின் இல்லத்தில்இடம்பெற்றது.
[ads id="ads1"]
கடந்த திங்கட்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின்தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனானசந்திப்பின்போது தமிழ் அரசியல் கைதிகளின்விபரங்களை பிரதமர் அவர்கள் திருசுமந்திரனிடம் கேட்டறிந்ததோடு முழுமையானவிபரங்களை தன்னிடம் சமர்ப்பிக்கும்படிக்கும்கேட்டிருந்தார்.

 இதனடிப்படையில் தமிழ் அரசியலைகைதிகளின் முழுவிபரங்களும் முன்னாள் மனிதஉரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர் அம்பிகாசற்குணம் அவர்களின் பங்களிப்புடன் உறுதிசெய்யப்பட்டு முழுமையான அறிக்கை ஒன்றினை திருசுமந்திரன் அவர்கள் இன்று பிரதமர் அவர்களிடம்கையளித்தார்.

இந்த கைதிகளுள் வழக்குகள் முடிவிற்கு வந்தவர்கள்தொடர்பில் தான் ஜனாதிபதி அவர்களுடன்பேசுவதாகவும் திரு சுமந்திரன் அவர்களையும்ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுமாறும்கேட்டுக்கொண்ட பிரதமர் அவர்கள் ஏனையோர் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை தான்மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் திருசுமந்திரனோடு கலந்துரையாடிய பிரதமர் அவர்கள், தாம் புதிய அரசியல் யாப்பொன்றினை உருவாக்கும்பணிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் ஜனாதிபதிஅவர்களின் கொள்கை விளக்க உரையில் ஐனாதிபதி அவர்களும் இதனை உறுதிசெய்துள்ளதனையும் சுட்டிக்காட்டினார்.

புதியபாராளுமன்றம் கூடுகின்றபோது இது தொடர்பிலானநடவடிக்கைகளை தாம் ஆரம்பிக்கின்றபோது தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இந்த முயற்சிகளிற்குஅத்தியாவசியமாகும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
[ads id="ads2"]
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கிஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கம்இடம்பெறுகின்றபோது அத்தகைய நடவடிக்கைகளிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு நிச்சயம்இருக்கும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின்ஊடக பேச்சாளர் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல்உள்ள தேசிய பிரச்சினைக்கான தீர்விற்கு  முன்னுரிமை கொடுக்கப்படுவதன் அவசியத்தினையும்வலியுறுத்தினார்.

சுமார் ஒரு மணித்தியாலம் வரை நீடித்தஇக்கலந்துரையாடலில் தமிழ் அரசியல் கைதிகளின்விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமானநடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாக பிரதமர் அவர்கள் உறுதியளித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post