உள்நாட்டு அமைதியின்மையைத் தணிக்க இராணுவத்தை அனுப்பவுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு! - Yarl Voice உள்நாட்டு அமைதியின்மையைத் தணிக்க இராணுவத்தை அனுப்பவுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு! - Yarl Voice

உள்நாட்டு அமைதியின்மையைத் தணிக்க இராணுவத்தை அனுப்பவுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், உள்நாட்டு அமைதியின்மையைத் தணிக்க இராணுவத்தை அனுப்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

நகரங்களும் மாநிலங்களும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டால், தங்கள் குடியிருப்பாளர்களைப் பாதுகாக்க இராணுவத்தை நிலைநிறுத்தி அவர்களுக்கான பிரச்சினையை விரைவாக தீர்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், 40இற்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க் நகரம் செவ்வாய்க்கிழமை முதல் வரை முடக்க நிலையில் உள்ளது. மேலும் வொஷிங்டன் டி.சி தனது ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு இரவுகளுக்கு நீட்டித்துள்ளது.

ஆனால் ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் தடையின்றி தொடர்கின்றன. மே 25ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்கள் நகரங்கள், மாநிலங்களை கடந்து பல்வேறு நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்கா முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு முக்கிய குற்றவாளியாக கருதப்படும் டெரெக் சாயுவின் என்ற அதிகாரி மீது மூன்றாம் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மேலும் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜோர்ஜ் ஃபிலாய்டின் உத்தியோகபூர்வ பிரேத பரிசோதனையில் ஃப்ளாய்டின் மரணம் ஒரு கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post