பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலை வளாகத்தில் கிருதித் தொற்று விசும் பணிகள்.. - Yarl Voice பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலை வளாகத்தில் கிருதித் தொற்று விசும் பணிகள்.. - Yarl Voice

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலை வளாகத்தில் கிருதித் தொற்று விசும் பணிகள்..

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலை வளாகத்தில் கிருதித் தொற்று விசும் பணிகள் யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் இரண்டாவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப் படையினரால் இந்தப் பணி யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது

3 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 5 கட்டங்களாக மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதன்படி வரும் 29ஆம் திகதி அனைத்துப் பாடசாலைகளுக்கும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் கடமைக்குத் திரும்பவேண்டும்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவுக்கு உள்பட்ட பாடசாலைகளுக்கு நேற்று புதன்கிழமை தொடக்கம் நாளைமறுதினம்  சனிக்கிழமை வரை பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப் படையினரால் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் முதல் பணியாக யாழ்ப்பாணம் திருக்குடும்பக் கன்னியர்மடம் கல்லூரி, யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் சிறப்பு அதிரடிப் படையினரால் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி நேற்று  முன்னெடுக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post