வலி கிழக்கு பிரதேச சபை நுழைவிடங்களில் வரவேற்புதூண்கள் அமைக்க நடவடிக்கை - தவிசாளர் நிரோஷ் - Yarl Voice வலி கிழக்கு பிரதேச சபை நுழைவிடங்களில் வரவேற்புதூண்கள் அமைக்க நடவடிக்கை - தவிசாளர் நிரோஷ் - Yarl Voice

வலி கிழக்கு பிரதேச சபை நுழைவிடங்களில் வரவேற்புதூண்கள் அமைக்க நடவடிக்கை - தவிசாளர் நிரோஷ்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆட்சி பிரதேச எல்லைகளில் மும்மொழிகளிலான வரவேற்புக் கொங்கிறீட் தூண்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இவ் வகையில் யாழ் - பருத்தித்துறை வீதியில் இயாழ் - பலாலி வீதி இருபாலை – கோண்டாவில் வீதி கைதடி – மாணிப்பாய் வீதிஇ புத்தூர் - சுன்னாகம் வீதி இராச வீதி அச்சுவேலி – பலாலி வீதி தொண்டமனாறு – தெல்லிப்பழை வீதி புத்தூர் - சாவகச்சேரி வீதி ஆகிய பிரதான வீதியில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆட்சி எல்லைகளிலேயே கொங்கிறீட்டிலான மும்மொழி வரவேற்பு; தூண்கள் அமைக்கப்படவுள்ளன.

இதற்காக சபை நிதியில் 1.42 மில்லியன் ரூபாய்' செலவில் மதிப்பீடுகள் தாயாரிக்கப்பட்டு கோள்விக்கோரல்கள் மூலம் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. வலிகாமம் கிழக்கு பிரதேச சபை யாழ் குடநாட்டில் உள்ள பிரதேச சபையில் பரந்த பிரதேசத்தினை முகாமைசெய்யும் பொறுப்பினைக் கொண்டுள்ளது.  104 சதுரக்கிலோமீற்றர் பிரதேசத்தினையும் 74 ஆயிரம் வரையிலான மக்களையும் கொண்ட பரந்த சபை ஆகும். 

இந் நிலையில் பிரதேச எல்லைகளுக்கு வரவேற்புத் தூண்களை இடுவதன் வாயிலாக பிரதேசத்திற்குள் வருபவர்களை சிறந்த முறையில் வழிகாட்டவும் தமிழர் பண்புகளில் ஒன்றான வரவேற்கும் பாங்களை வெளிப்படுத்ததுவதாகவும் அமையும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 

மேற்படி தூண்களில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அன்புடன் வரவேற்கின்றது என்ற வாசகம் முதலிலும் அடுத்து சிங்களத்திலும் அதனைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் அமையப்பெறவுள்ளன. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post