புதிதாக பதிவு செய்ய 160 கட்சிகள் விண்ணப்பம் - இதுவரை 40 நிராகரிப்பு - ஏனையவை பரீசீலனை - Yarl Voice புதிதாக பதிவு செய்ய 160 கட்சிகள் விண்ணப்பம் - இதுவரை 40 நிராகரிப்பு - ஏனையவை பரீசீலனை - Yarl Voice

புதிதாக பதிவு செய்ய 160 கட்சிகள் விண்ணப்பம் - இதுவரை 40 நிராகரிப்பு - ஏனையவை பரீசீலனைபுதிதாக பதிவு செய்வதற்காக 160 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு விண்ணப்பித்த நிலையில் அவை தொடர்பான பரிசீலனைகள் நேற்று முதல் ஆரம்பித்துள்ளது.

கடந்த காலத்தில் புதிய அரசியல் கட்சியின் பதிவிற்காக 160 கட்சிகள் விண்ணப்பித்திருந்தபோது தேர்தல் அறிவித்தல் வெளியானது. இதனால் புதிய கட்சிகளின் அங்கீகாரம் தடைப்பட்டது. தற்போது தேர்தல் முடிவுற்றதனால் புதிய கட்சிகளின் பதிவினை அங்கீகரிக்கும் பணியினை முடிவுறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவற்றின் அடிப்படையில் இதுவரை விண்ணப்பித்த 160 கட்சிகளின் படிவங்கள் பரிசீலனையுன்போது 40 கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 120 விண்ணப்பங்களுமே பரிசீலிக்கப்படெகின்றது.

இவ்வாறு பரிசீலிக்கப்படும் 120 விண்ணப்பங்களிலினதும் பணியை நிறைவு செய்ய ஒரு வார காலம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதோடு மேலும் பல விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படலாம் எனவும் கருதப்படுகின்றது.

இலங்கையில் தற்போது 79 கட்சிகள் பதிவில் உள்ள நிலையில் மேலும் அதிக கட்சிகள் ஒரே தடவையில் பதிவிற்கு உட்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post