கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதலாவதாக உருவாக்கிய ரஷ்யா - Yarl Voice கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதலாவதாக உருவாக்கிய ரஷ்யா - Yarl Voice

கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதலாவதாக உருவாக்கிய ரஷ்யா

உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு நாட்டின் சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

மேலும் மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது என்றும் தனது மகளுக்கும் குறித்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இணைந்து உருவாக்கியுள்ளது.

இன்று காலைஇ உலகில் முதல் முறையாகஇ கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் தடுப்பூசியை கண்டுபிடிக்க பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த புடின் மேலும் இது 'உலகிற்கு மிக முக்கியமான படி' என்று குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post