புதிய தமிழ்க் கட்சியொன்றை ஆரம்பிக்கிறார் அங்கஐன்? - Yarl Voice புதிய தமிழ்க் கட்சியொன்றை ஆரம்பிக்கிறார் அங்கஐன்? - Yarl Voice

புதிய தமிழ்க் கட்சியொன்றை ஆரம்பிக்கிறார் அங்கஐன்?

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அங்கஐன் இராமநாதன் தரப்பினர்  தற்போது அங்கம் வகிக்கும் அதே கட்சியின் ஒத்த வடிவத்தில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யாழ் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அங்கஐன் இராமநாதன் தற்போது புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

இலங்கைத் தமிழர் சுதந்திர முன்னணி என்ற பெயரில் இப் புதிய கட்சியை தனது தந்தையார் சதாசிவம் இராமநாதனின் தலைமையில் ஆரம்பிக்கும் நோக்கில் தேர்தல் செயலகத்தில் பதிவுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த தேர்தலின் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி பொதுஐன பெரமுன மற்றும் ஐக்கியஎதேசியக் கட்சிகள் போன்ற தேசிகயக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிகளிக்கக் வேண்டாமென தமிழர் தரப்புக் கட்சிகள் Nர்தல் மேடைகளில் தெரிவித்து வந்திருந்தது.

இந்த நிலைமையிலயே தேசிய கட்சியில் அங்கத்துவம் வகித்து அக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வந்த நிலையிலையே புதிய தமிழ்க் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கு அங்கஐன் தரப்பினர் முயற்சிகளை முன்னெடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post