இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி தெரிவிப்பு - Yarl Voice இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி தெரிவிப்பு - Yarl Voice

இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி தெரிவிப்பு

இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவ கல்லூரியொன்றின் பட்டமளிப்பு விழாவில் காணொளிகாட்சி வாயிலாக கலந்துகொண்டு கருத்துரைத்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்..

 'மருத்துவ துறையில் நாட்டிலேயே சிறந்த கட்டமைப்பு வசதிகளை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்க 190  கோடி ரூபாயில் கருவிகள் வாங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது. பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.  மருத்துவம் படிக்கும் மாணவர்களின் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post