தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை தீர்விற்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் - கூட்டமைப்பிடம் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு - Yarl Voice தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை தீர்விற்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் - கூட்டமைப்பிடம் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு - Yarl Voice

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை தீர்விற்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் - கூட்டமைப்பிடம் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று மhலை 5.30மணி முதல் 7 மணி வரை சந்தித்து தமிழ் மக்களின் கரிசனைகள் தொடர்பில் விசேடமாக நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் பின்னரான தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

இதன்போது மீண்டும் பாராளுமன்றத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்யப்பட்டதற்கு தனது வாழ்த்துதல்களை தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர் இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு
தீர்வொன்றினை காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என வலியுறுத்தினார்.

இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post