இனப்பிரச்சனை விடயத்தில் இந்தியா மௌனமாக இருக்க கூடாது - கடமையுள்ளதாக சிறிதரன் தெரிவிப்பு - Yarl Voice இனப்பிரச்சனை விடயத்தில் இந்தியா மௌனமாக இருக்க கூடாது - கடமையுள்ளதாக சிறிதரன் தெரிவிப்பு - Yarl Voice

இனப்பிரச்சனை விடயத்தில் இந்தியா மௌனமாக இருக்க கூடாது - கடமையுள்ளதாக சிறிதரன் தெரிவிப்பு

இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவ்வாறு தெரிவித்தார்

 அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்

நேற்றைய தினம் இந்த நாடாளுமன்றத்தில் நாட்டினுடைய அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய அக்கிராசன உரை தொடர்பிலே பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பில் இந்த நாட்டிலே 70 ஆண்டுகளுக்கு மேலாக புரையோடிப்போய் இருக்கின்ற தமிழர்களுடைய இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட இந்த நாடாளுமன்றத்தில்  ஜனாதிபதி அவர்களால் பேசப்படாமல் விடப்பட்டமை மிக மன வருத்தத்துக்குரியதும் ஒரு நாட்டின் முக்குக்கியமான பிரச்சினை பற்றி நாட்டின் தலைவர் பேசாமல் விட்டதும்கூட இந்த நாட்டிலே ஒரு துரதிஸ்டவசமான நிலையாகவே எங்களால் பார்க்கப்படுகின்றது.

 மிக முக்கியமாக இந்த நாட்டின் முதன்மையான பிரச்சனையாக இருப்பது இந்த நாட்டிலே இருக்கின்ற இரு தேசிய இனங்களான சிங்கள தேசிய இனமும் தமிழ் தேசிய இனமுமே இருக்கின்றது.

இதிலே தமிழ் தேசிய இனம் எழுபதுஇ எண்பது ஆண்டுகளாக இந்த மண்ணிலே பல இனப்படுகொலைகளுக்கும் அழிவுகளுக்கும் உள்ளாக்கப்பட்ட ஒரு இனம். அதனால் தான்  அவர்கள் ஒரு நீண்ட கால போராட்டத்துக்குள் தங்களுடைய வாழ்க்கையை அவர்கள் அர்ப்பணித்திருந்தார்கள். 

அவ்வாறு அர்ப்பணிக்கப்பட்ட அவர்களுடைய வாழ்க்கையிலே இன்று போராட்ட வடிவங்கள் மௌனிக்கப்பட்டிருந்தாலும் இந்த நாட்டினுடைய பிரஜைகள் தாங்கள்இ நாங்கள் இந்த நாட்டிற்கு உரியவர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் இன்னும் உருவாகாமல் இருப்பது இந்த நாட்டிலே கொண்டுவரப்படுகின்ற பல்வேறுபட்ட சட்டங்களும்இ சிங்கள மக்களுடைய மனோநிலைகளும்இ அவர்களை வழிநடத்தும் சிங்கள தலைவர்களுடைய எண்ணங்களும் இன்னும் இன்னும் இந்த நாட்டை ஒரு வேறுபட்ட நிலைக்குள் வைத்திருக்கின்றது.

 குறிப்பாக இன்றைய அரசாங்கம் அறுதிப்பெரும்பான்மையோடு தங்களுக்கு ஒரு பெரும்பான்மை பலம் இருப்பதாக கருதிக்கொண்டு ஒரு மிகக்கூடிய ஒரு மமதையோடு இதனை நடத்த முனைவார்களானால் மீண்டும் இந்த நாடு ஒரு இனவாத ரீதியான சகதிக்குள் தள்ளப்படும் என்பதற்கு வரலாறு ஒரு பாடத்தை இவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதல்ல. 

ஏனென்றால் நீண்ட நெடும் வரலாற்று பாடங்களை அவர்கள் கற்றுக் கொண்டவர்கள். இதனை தான் நான் இந்த இடத்திலே குறிப்பிட விரும்புகின்றேன் இந்த ஒரே தீவினுள் இந்த இரண்டு தேசிய இன மக்கள் வசிக்கின்ற போதும் அவர்கள் தமக்குரிய அரசியலையும்இ பொருளாதாரத்தையும் வெவ்வேறு அடிப்படையில் கொண்டுள்ளனர்.

இந்த உண்மைகளை அனுசரித்து ஏற்கனவே நடந்திருந்தால் இலங்கை பொருளாதாரத்தின் அபிவிருத்தியை எட்டுவதில் எவ்வித பிரச்சினைகளையும் கொண்டிருக்க மாட்டாது.

ஏனெனில் இன்று இலங்கையிலே பொருளாதார பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.இலங்கையிலேயே அபிவிருத்தி என்பது ஒரு மாய சொல்லாக சொல்லப்படுகின்றதுஇஎல்லோருடைய கருத்துக்களிலும் அவர்களுடைய எண்ணங்களிலும் அபிவிருத்தி என்பதே பேசப்படுகின்றது. 

இந்த அபிவிருத்தி என்பதற்கான முதலாவது இந்த நாட்டிலே ஒரு இணக்கம் ஏற்பட வேண்டும்இ இந்த நாட்டிலே வாழுகின்ற மக்களுக்கிடையில் ஒரு உறவு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்இ தாங்களும் இந்த நாட்டினுடைய பிரஜைகள் எங்கின்ற எண்ணம் அவர்களிடம் கொண்டுவரப்பட வேண்டும்.ஆகவே அது இல்லாதவரைக்கும் இந்த நாட்டின் அபிவிருத்தி என்கிற சொல் ஒரு இனத்தினுடைய அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதாக அமையாது என்பதை நீங்கள் முதலிலே புரிந்துகொள்ள வேண்டும்.

 மிக முக்கியமாக நாங்கள் அறுதிப்பெரும்பான்மைகளை பெற்றிருக்கிறோம் அல்லது பலங்களோடு இருக்கிறோம் என்ற எண்ணங்களை மட்டும் வைத்துக்கொண்டு இந்த நாட்டிலே இவர்கள் தங்களுடைய பலங்களை பிரயோகிக்க முனைந்தால் 1956 ம் ஆண்டில்  தனி சிங்கள சட்டம் கொண்டுவந்த போது இரு மொழிகள் ஒரு நாடுஇ ஒரு மொழி இரு நாடுகள் என்று கூறிய சிரேஷ்ட அரசியல் வாதியும்இ சட்டத்தரணியும் இ சரித்திர ஆசிரியருமான கொல்வின் ஆர் டீ சில்வா நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற பதவியை ஜே .ஆர் அவர்கள் உருவாக்கிய போதும் ஜே .ஆர் ஜேவர்த்தனவை பார்த்து  பிவருமாறு கூறினார்.

 உங்களுடைய காலத்தில் இந்த சட்டத்தை வேண்டுமானால் நீங்கள் நடைமுறைப்படுத்துங்கள். ஆனால் நீங்கள் போகும்போது இந்த சட்டத்தை ரத்துசெய்து பாராளுமன்ற அதிகாரம் நிலைக்க வழிவகுத்துவிட்டு செல்லுங்கள் இ உங்களுக்கு பின்னரும் ஒருவன் உங்களை போல் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டான். கொடூரமாக அவன் இதனை நடைமுறைப்படுத்தக்கூடும் என்று குறிப்பிட்டதாக வரலாறு கூறுகின்றது.

 இந்த காலத்திலே கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடை சட்டம் எடுக்கப்படவில்லைஇ சிறைக்கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லைஇ வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் மூன்று ஆண்டுகளை நெருங்குகின்றது.

காணி விடுவிப்புக்காக மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள் சொந்த மண்ணில் வாழ்வதற்குஇஇயல்பு வாழ்க்கை இன்னும் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்படவில்லைஇ இந்த நிலைமைகளிலெல்லாம் இன்னுமே இந்த நாடு சரியான முன்னேற்றங்களை எட்டவில்லை.

குறிப்பாக இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கான ஒரு விடுதலைக்காக தமிழ் மக்களுடைய ஒரு வாழ்வுக்காக முதன்முதல் பல்வேறுபட்ட தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.அவ்வாறு தீர்வு திட்டங்கள் முன்வைக்கப்பட்ட பொழுதெல்லாம் சமஸ்டி அடிப்படையிலான தீர்வுஇ அதற்கான முன்னேற்றங்கள் தந்தை செல்வா அவர்களால் இந்த நாட்டிலே முன்வைக்கப்பட்ட பொழுது யாருமே ஏற்றுக்கொள்ளாத நிலை காணப்பட்டது. குறிப்பாக 1949 நவம்பர  18 ம் திகதி  சமஸ்டி கட்சியுடைய அங்குரார்ப்பண கூட்ட உரையில் தந்தை செல்வநாயகம் பிவருமாறு கூறினார்.

 தமிழ் பேசும் சுயாட்சி மாகாண அலகையும் சிங்கள சுயாட்சி மாகாண அலகையும் உள்ளடக்கி இரண்டுக்கும் பொதுவான மத்திய அரசிற்கு வழி செய்யும் சமஸ்டி யாப்பு ஒன்றை இலங்கைக்கு கொண்டுவரவேண்டும்இசிறிய தமிழ் பேசும் தேசம் அழிந்து அல்லது பெரிய தேசத்தால் சிதைக்கப்பட்டு  போவதை தவிர்ப்பதற்கான ஆகக்குறைந்த ஏற்பாடாக இதுவே அமைய முடியும். 

சமஸ்டி அரசமைப்பு தான் அடைவதற்கு தகுதியான சிறந்த ஏற்பாடு அதனால் எவருக்கும் குறிப்பாக சிங்களவர்களுக்கு கூட அநீதி இழைக்கப்பட்ட மாட்டாது என்ற அடிப்படையில் தன்னுடைய கருத்தை அந்த காலத்தில் அவர் முதன் முதலிலேயே முன்வைத்திருந்தார். 

இவ்வாறு பலரும் தங்களுடைய முன்மொழிவுகளையெல்லாம் குறித்த காலத்திலேயே வைத்திருந்தாலும் கூட சிங்களத்தலைவர்களிடம் இப்பொழுதும் அந்த நல்லெண்ணங்கள் அந்த சிந்தனைகள் இல்லாமல் செல்வது மிக மாணவருத்தத்துக்குரியது.

 இறுதியிலே தமிழ் மக்கள் மீதான போரை வெற்றிகொள்வதற்காக உலக நாடுகள் பாரிய அளவிலே இலங்கைக்கு உதவி புரிந்தன அப்பொழுது இலங்கையால் அவர்களுக்கு பல உத்தர வாதங்கள் வழங்கப்பட்டது.

 குறிப்பாக இந்தியாவுக்கு வழங்கப்பட்ட உத்தரவாதம் இ இந்திய அரசு இந்தியாவுடைய அயல் உறவுதுறை அமைச்சர் கிருஸ்ணா அவர்கள் வந்த போது கூட இப்போது எமக்கு முன்னாள் இருக்கும் பிரதம மந்திரி அவர்கள் மஹிந்த ராஜபக்ச அவர்களே குறிப்பிட்டிருந்தார்.

நாங்கள் 13 பிளஸ் ஐ தாண்டி தமிழ் மக்களுக்கான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்றுஇ ஆனால் இதுவரை 13 ஐ கூட நடைமுறைப்படுத்த அல்லது அதனுடைய மேலதிகமான எண்ணங்களை கூட கொண்டிருக்க இந்த அரசுகள் முன்வரவில்லை என்பது துரதிஸ்டவசமானது. 

குறிப்பாக இந்த நாட்டிலே அழிந்துபோன ஒரு மக்களுடைய எண்ணங்களையும் அவர்களுடைய உணர்வுகளையும் மதிக்க வேண்டிய தேவை இந்த நாட்டின் மக்களுக்கு இருக்கிறது.ஏனென்றால் இந்த நாடு ஒரு நேர்மையான பாதைக்கு செல்ல வேண்டுமென்றால் ஒரு இனத்தை அளித்து அல்லது அவர்களுடைய உரிமைகளை நசித்து அவர்களை

(இதன் போது பெரும்பாண்மை இனத்தவ பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறுக்கறுத்து எதிர் கருத்துக்களை முன்வைத்தார்)

 சபாநாயகர் அவர்களே சில மன்னர்களுக்காக நாங்கள் பேசவேண்டிய அவசியமில்லை. என்னை பொறுத்தவரைக்கும் நான் ஒரு தமிழ் மக்களுடைய பிரதிநிதியாக இந்த சபையிலே என்னுடைய கருத்தை சொல்லவேண்டிய தேவை இருக்கின்றது.யாரும் இடையில் எழும்பி தங்களுடைய உறுப்புக்களை தக்கவைப்பதற்காக அல்லது யாருக்கோ தங்கள் தாஜா பண்ணுவதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. 

ஆகவே எங்களுடைய மக்களின் உண்மையான பிரச்சனைகள் எங்கே இருக்கிறது? இந்திய நாடு இலங்கை இந்திய ஒப்பந்தம் சார்பாக 1987 ம் ஆண்டிலே தமிழர் தரப்பாக இலங்கையிலே கையொப்பம் இட்டிருந்தது இந்திய நாடு. அந்த நாட்டின் பிரதமர் ராஜு காந்தி அவர்களும் இலங்கையின் ஜனாதிபதி ஜே. ஆர் . ஜேவர்த்தன அவர்களும் தான் அந்த அப்பந்தத்திலே கையொப்பம் இட்டிருந்தார்கள்.

 ஆகவே இந்த நாட்டின் உடைய ஒப்பந்தத்தில் தமிழர் தரப்பாக கையொப்பம் இட்டிருந்த இந்தியா இப்பொழுது மௌனம் காப்பது எங்களுடைய மக்களுக்கு பொருத்தமானது அல்y .,ந்தியாவினுடைய கடமை இருக்கிறது. இப்பொழுது உங்களிடம் பெரும்பான்மை இருக்கிறது.

இந்த அரசாங்கத்திடம் எதையும் செய்யக்கூடிய 150 ற்கும் மேற்பட்ட பெரும்பான்மை ஆசனங்களை கொண்டிருக்கிறீர்கள் நல்லெண்ணங்களோடு செயற்படுங்கள். இப்பொழுது நீங்கள் நாங்கள் பேசும் போது இடைமறித்து இனவாதத்தோடு பேசுகின்ற சிந்தனைகளை தூக்கியெறியுங்கள்.

 மாற்றம் என்பது சிங்களத்தலைவர்களிடம் வரட்டும்இ  மாற்றம் என்பது தமிழர்களிடம் வரவேண்டியதென்பதல்லஇமாற்றம் யாரால் அழிக்கப்பட்டோம்  நாங்கள் யாரால் கொல்லப்பட்டோம்இ இன்றும் தாங்கள் வாழ்வதற்கான உரிமைக்காக போராடுகின்ற தமிழினம் மாற்றத்தை எதிர்பார்ப்பது சிங்கள மக்களிடமிருந்துதான். 

சிங்கள தலைவர்களிடமிருந்துதான் இ ஆகவே மாற்றம் என்பதை முதலிலே உருவாக்குகின்ற இடமாக அறுதி பெரும்பான்மையோடும் பலத்தோடும் ஒரு வெற்றியின் களிப்போடும் இருக்கின்ற நீங்கள் முதலிலே உங்களுடைய நல்லெண்ணங்களை வெளிப்படுத்துங்கள்.

  பிரதம மந்திரி கூட கடந்த காலங்களை விட இப்போது நல்லெண்ணங்கள் இருப்பதாக பலர் பேசுகின்றனர்இஅவருடைய கருத்துக்களில் சில விடயங்கள் சொல்லப்படுகின்றனஇ அவர்கூட ஐக்கிய நாடுகள் சபை சென்று இந்த நாட்டிலே நடைபெற்ற சில விடயங்கள் தொடர்பிலே பேசியிருக்கின்றார்.

ஆகவே உண்மைகளை புரிந்துகொள்ளுங்கள்.நியாயங்களை புரிந்து கொள்ளுங்கள் இந்த நாட்டிற்கு எது தேவை  என்பதை புரிந்து கொள்ளுங்கள் வெறுமனே எழுந்து நின்று நாம்பேசும் போது நீங்கள் வாய் சவுடாலுகளுக்கு பேசுவது அர்த்தமற்றதுஇ இந்த நாட்டின் தேவை எது? எது முக்கியமானதுஇ இந்த நாட்டு மக்களுக்கு இதை செய்யவேண்டும்இ அதற்க்கு நீங்கள் தயாராகுங்கள்இ நாங்கள் தயாராக இருக்கிறோம்இ  குறிப்பாக இந்திய இந்த விடயத்தில் தலையிடவேண்டியதென்பது மிக மிக பிமுக்கியமானது.

 கவுரவ சபாநாயகர் அவர்களே இறுதி யுத்தத்தை நடத்துவதிலே அமெரிக்காஇ ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு பூரணமான ஒத்துழைப்பையும் ஆயுதங்களையும்  வழங்கியிருந்தது. அனால் அது முடிந்த பிற்பாடு சமாதானத்திற்கு தங்களுடைய முழு அங்கீகாரத்தையும் வழங்குகின்றது. 

ஆகவே அமெரிக்க நாடு ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைப்போடு எங்களுடைய பிரச்சனைக ளுக்கான தீர்வை முன்வைக்க ஒவ்வொரு சிங்களத்தலைவர்களும் முழு மனதோடு செயற்படுங்கள்.இனவாத கருத்துக்களையும் இனவாத சிந்தனைகளையும் தூக்கி வெளியிலே போடுங்கள். என அவர் மேலும் தெரிவித்தார்




 

   




 

0/Post a Comment/Comments

Previous Post Next Post