திருமண வயதெல்லையில் மாற்றம்? நடாளுமன்றதில் புதிய பிரேரணை - Yarl Voice திருமண வயதெல்லையில் மாற்றம்? நடாளுமன்றதில் புதிய பிரேரணை - Yarl Voice

திருமண வயதெல்லையில் மாற்றம்? நடாளுமன்றதில் புதிய பிரேரணை


நாட்டில் குறைந்த திருமண வயதெல்லையை நிர்ணயிப்பதற்கான தனி நபர் பிரேரணையொன்று மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரமித்த பண்டார தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவிடம் இந்த பிரேரணை நேற்று நாடாளுமன்ற செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையில் நாட்டில் ஆகக் குறைந்த திருமண வயதெல்லையாக 18 வயதை நிர்ணயிக்க வேண்டும் என அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய மற்றும் சர்வதேச கடமைகளை நிறைவேற்றுவதே  இந்த பிரேரணையின் நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரமித பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரேரணை யாரையும் இலக்குவைத்து கொண்டுவரப்பட்டதொன்று அல்லவெனவும் சிறுவர்கள் சிறுவர்களாக கவனிக்கப்படுவதே இதன் நோக்கமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பிரேரணை மூலம் அனைத்து சிறுவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரமித்த பண்டார தென்னகோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post