ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்க வேண்டும் - சிறிதரன் - Yarl Voice ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்க வேண்டும் - சிறிதரன் - Yarl Voice

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்க வேண்டும் - சிறிதரன்


ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு ஐனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் அறுதிப் பெரும்பான்மையுடனான சகல அதிகாரங்களும் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இந்த அதிகாரங்களைக் பயன்படுத்தி எமது மக்களின் காணிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்க வேண்டுமென்றும் கோரியுள்ளார். 

யாழ்ப்பாணம் மண்டைதீவில் பொது மக்களின் காணியை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது..

மக்கள் எழுச்சியாக மக்களுடன் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இணைந்து காணி சுவீகரிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இதில் மிக முக்கியமான விடயம் மக்கள் தமது சொந்த இடங்களில் இன்னும் குடியேறி வாழ முடியவில்லை. தங்களுடைய பிள்ளைகளுக்காக காணிகளைப் பகிர்ந்தளிக்க முடியவில்லை. வீட்டுத் திட்டத்தைக் கூட அமைந்து சொந்த நிலத்தில் வாழ முடியவில்லை 

இவ்வாறு பல ஏக்கங்களுடன் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் அவர்களின் காணிகளை சுவீகரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பொது மக்களின் காணிகள் மீளவும் பொது மக்களிடமே கையளிக்கப்பட வேண்டியது மிக மிக அவசியமானது. 

நாட்டில் அறுதிப் பெறும்பான்மையுடன் இந்த அரசு அமைந்திருந்தாலும் மக்களுடைய காணிகளை விடுவிக்கக் கூடிய சகல அதிகாரங்களும் ஐனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் உண்டு. 

அதனடிபபடையில் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலே எங்களுடைய முழுமையான செயற்பாடுகள் தொடரும். அது பாராளுமன்றம் வரையான எங்களுடைய செயற்பாடு. சட்ட ரீதியான இதற்கு என்ன செய்ய முடியுமோ அந்தச் சட்ட ரீதியான செயற்பாடுகளை நாங்கள் மேற்கொள்ளுவோம். 

மேலும் மண்டைதீவு மட்டுமல்ல தீவுப்பகுதிகளில் புங்குடுதீவு நெடுந்தீவு உள்ளிட்ட ஏனைய பல இடங்களிலும் எமது மக்களின் காணிகள் அபகரிக்கும் முயற்சிகள் உள்ளது. அவற்றுக்கெல்லாம் எதிரான எங்களுடைய முழுமையான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ளுவோம். 

அந்த நடவடிக்கைகளில் நாங்கள் தீவிரமாக இறங்கியும் இருக்கிறோம். அந்த மக்களோடு இணைந்து அவர்களின்; காணிகளை எடுத்துக் கொடுப்பது எங்களுடைய கடமை. அதற்காண நூறு வீத முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ளுவோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post