தமிழர் தயாகத்தை கபளீகரம் செய்யும் இன அழிப்பின் நீட்சி தான் நடைபெறுகிறது - சுகாஷ் சுட்டிக்காட்டு - Yarl Voice தமிழர் தயாகத்தை கபளீகரம் செய்யும் இன அழிப்பின் நீட்சி தான் நடைபெறுகிறது - சுகாஷ் சுட்டிக்காட்டு - Yarl Voice

தமிழர் தயாகத்தை கபளீகரம் செய்யும் இன அழிப்பின் நீட்சி தான் நடைபெறுகிறது - சுகாஷ் சுட்டிக்காட்டு


தமிழர் தயாகத்தை திட்டமிட்டு கபளீகரம் செய்கின்ற இலங்கை அரசினுடைய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் நீட்சி தான் இப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மண்டைதீவில் பொது மக்களின் காணியை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது..

மக்களுடைய காணிகளைச் சுவீகரிக்கிகன்ற நடவடிக்கையில் இரண்டாவது நாளாகவும் மக்களுடன் சேர்ந்து எங்களுடைய ஆட்சேபனையைத் தெரிவித்து தற்காலிகமாககத் தடுத்து நிறுத்தியிருக்கிறோம். உண்மையி;ல் இந்த காணி சுவீகரிப்பு என்பது கட்டமைபக்கப்பட்ட இன அழிப்பினுடைய நீட்சியாகத் தான் பார்க்க வேண்டியிருக்கிறது. 

தமிழர் தயாகத்தை திட்டமிட்டு கபளீகரம் செய்கின்ற இலங்கை அரசினுடைய நிகழ்ச்சி நிரலினுடைய அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் நீட்சி தான் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

இன அழிப்பு என்பது முள்ளிவாய்க்கால் இனஅழிப்போடு முற்றுப் பெறாமல் தொடர்ந்தும் தமிழர் தாகத்தை ஆக்கிரமித்து தமிழ்களை வெளியேற்றம் செய்கின்ற செயற்பாடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

இதற்கு நாங்கள் என்றைக்கும் தமிழ் மக்களுடன் இணைந்த எங்கள் ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்திக் கொண்டே இருப்போம். இதைத் தடுக்க வேண்டும் என்றால் ஐக்கிய நாடுகள் குற்றவியல் நீதிமன்றுக்கு எங்களுடைய விவசகாரங்களை பாரப்படுத்த வேண்டும்.

ஆவ்வாறு பாரப்படுத்;துவதன் ஊடாகத் தான் இவற்றை நாங்கள் தடுத்து நிறுத்த முடியும் என்பதற்கப்பால் ஐனநாயக வழியலும் எங்களுடைய எதிர்ப்புகளை நாங்கள் தொடர்ந்தும் பதீவு செய்து கொண்டிருப்போம் என்றார். 


0/Post a Comment/Comments

Previous Post Next Post