தேசிய அமைப்பாளர் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து மணிவண்ணணை தூக்கியது முன்னணி - Yarl Voice தேசிய அமைப்பாளர் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து மணிவண்ணணை தூக்கியது முன்னணி - Yarl Voice

தேசிய அமைப்பாளர் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து மணிவண்ணணை தூக்கியது முன்னணி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து கட்சியின் சிரேஸ்ர உறுப்பினரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணணை நீக்குவதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 முன்னணியின் மத்திய குழுக் கூடு;டம் நேற்று  கட்சியின் தலைவரான கயேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற போதே மேற்படி மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மணிவண்ணண் கட்சியின் கட்டுப்பாடுகளை மறீச் செயற்பட்டதாக கட்சியினர் தெரிவித்து வந்த நிலையில் நேற்று அவசரமாக கூடடி கட்சியின் மத்திய குழு மணிவண்ணணை நீக்குவதென முடிவெடுத்துள்ளதாக தெரிய வருகின்றது.

மேலும் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து அவர் இன்னமும் நீக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  அதனால் அவர் வகித்த பதவிகளிலிருந்து மணிவண்ணண் நீக்கப்பட்டிருந்தாலும் கட்சியின் உறுப்பினராகவே தொடர்ந்தும் இருக்கின்றார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post