இலங்கையின் நிலையான ஐக்கியத்திற்கு அதிகாரப் பகிர்வே ஒரே வழி - சபா குகதாஸ் சுட்டிக்காட்டு - Yarl Voice இலங்கையின் நிலையான ஐக்கியத்திற்கு அதிகாரப் பகிர்வே ஒரே வழி - சபா குகதாஸ் சுட்டிக்காட்டு - Yarl Voice

இலங்கையின் நிலையான ஐக்கியத்திற்கு அதிகாரப் பகிர்வே ஒரே வழி - சபா குகதாஸ் சுட்டிக்காட்டு


இலங்கையின் நிலையான ஐக்கியத்திற்கு அதிகாரப் பகிர்வே ஒரே வழி எனத்  தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பின் இளைஞரணிச் செயலாளருமான சபா.குகதாஸ் அதிகாரப் பகிர்வை வழங்கக் கூடிய புதிய அரசியமைப்பை கொண்டு வரவேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுபபி வைத்துள்ள அறிக்கையிலையே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..

பல்லின பல மொழி பேசும் மக்கள் கூட்டம் வாழும் இலங்கைத் தீவில் தொடர்ச்சியாக இருந்து வரும் ஒரே நாடு ஒரே சட்டம் நிலையான அபிவிருத்திக்கும் இன நல்லிணக்கத்திற்கும் பெரும் தடையாக உள்ளது. 

இது கடந்த கால வரலாற்று கசப்பான அனுபவம் இதனை மாற்றியமைத்து நாட்டை முன்னோக்கிய பாதையில் கொண்டு செல்ல அதிகாரப் பகிர்வே ஆரோக்கியமான வழியாகும்.

இன்று உலகின் பல நாடுகள் பல இனங்களுடன் ஐக்கியமாக சமூக பொருளாதார அரசியல் துறைகளில் அபிவிருத்தி அடைந்த நாடுகளாகவும் அபிவிருத்தியை அண்மிக்கின்ற நாடுகளாகவும் விளங்குவதற்கு அதிகாரப் பகிர்வின் மூலம் மாநில மாகாணப் பிரிவுகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்தமையே ஆகும். 

இந்த உண்மையை விளங்கி இலங்கை அரசாங்கம் இனவாத சாத்தானை புதைகுழியில் புதைத்துவிட்டு இன ஐக்கியத்தை ஏற்படுத்தி பிற் போக்கு சிந்தனையில் இருந்த வெளியே வந்து நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வை வழங்கக் கூடிய புதிய அரசியமைப்பை கொண்டு வரவேண்டும் இதனை சகல மக்களும் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளனர்.

 தற்போதைய கோட்டாபய  மகிந்த ராஐபக்ஷ அரசாங்கத்திற்கு மீண்டும் யுத்தத்தின் பின்னர்  இரண்டாவது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அத்துடன் தனித்து நின்று முடிவுகளை எடுப்பதற்கு எந்த தடைகளும் இல்லை. 

இதனை பயன்படுத்தி புதிய வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்துவார்களா? இல்லை 2015 போன்று 2025 மாறுமா? எல்லாம் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டில் தங்கியுள்ளது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post