புதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரையும் நியமியுங்கள் - ஜனாதிபதியிடம் மணோகணேசன் கோரிக்கை - Yarl Voice புதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரையும் நியமியுங்கள் - ஜனாதிபதியிடம் மணோகணேசன் கோரிக்கை - Yarl Voice

புதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரையும் நியமியுங்கள் - ஜனாதிபதியிடம் மணோகணேசன் கோரிக்கை


புதிய அரசியலமைப்பை வரைவதற்கான ஒரு குழுவை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நீங்கள் நியமித்துள்ளீர்கள். இதை நாங்கள் சாதகமாகவே பார்க்கிறோம்.

இதன் மூலம் இந்நாட்டில் நிலவி வரும் அரசியல்இ சமூகஇ கலாச்சாரஇ பொருளாதார பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளுக்கான வழிகளை புதிய அரசியலமைப்பு ஏற்படுத்திட வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

இந்நிலையில் உங்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில்இ வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் மற்றும் முஸ்லிம் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றமை எமக்கு மகிழ்ச்சியை தருகின்றது.

எனினும்இ இந்நாட்டில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய பிரதிநிதி இடம்பெறாமை எமக்கு கவலை தருகிறது. இது தற்செயலாக ஏற்பட்ட இடைவெளி என நாம் கருதுகின்றோம்.

எனவே தங்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில்இ சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்ய தகுதி வாய்ந்த ஒரு பிரதிநிதியை நியமிக்கும்படி வேண்டுகிறேன்.

நீங்கள் கேட்டுக்கொள்வீர்களாயின்இ தகுதி வாய்ந்த பிரதிநிதிகளின் பெயர்களை தங்கள் பரிசீலனைக்காக சிபாரிசு செய்யவும் நான் தயாராக இருகின்றேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இது தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச அவர்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் எழுத்து மூல கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூட்டணியின் தலைவர் கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post