கூட்டமைப்பில் ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு யாழில் வரவேற்பு - Yarl Voice கூட்டமைப்பில் ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு யாழில் வரவேற்பு - Yarl Voice

கூட்டமைப்பில் ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு யாழில் வரவேற்பு


தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ளது.

 கூட்டமைப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்இ கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஜனா கருணாகரம் ஆகியோர் யாழில் நடைபெறவுள்ள கட்சியின் வரவேற்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளனர். 

அந் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக நாளையதினம் யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அக் கட்சியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.  

0/Post a Comment/Comments

Previous Post Next Post