வடக்கு மாகாணத்தில் மஞ்சள் செய்கை மேற்கொண்டால் அதிக வருமானத்தை பெற முடியும் என வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் மஞ்சள் இறக்குமதியை நிறுத்தியுள்ளதால் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தென்னிலங்கை விவசாயிகள் மஞ்சள் செய்கையில் ஆர்வம் செலுத்தியிருக்கின்றனர்.
ஆனால், யாழ். மாவட்டத்தில் விவசாயிகள் இப்போதும் வெங்காயச் செய்கையினையே அதிகம் விரும்புகின்றனர் எனவும் மஞ்சள் பயிரிட்டாலும் அதிக இலாபம் கிடைக்கும் எனவும் வடக்கு பிரதி விவசாய பணிப்பாளர் தெரிவித்தார்.
மஞ்சள் பயிரிடக்கூடிய விவசாயிகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன எனவும் அவர்களுக்கு உரிய தொழில்நுட்ப விளக்கம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியா - தமிழ்நாட்டில் வைகாசி மாதத்தில் பயிரிடப்படும் மஞ்சள் தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment