இலங்கைக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை - Yarl Voice இலங்கைக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை - Yarl Voice

இலங்கைக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை


சீனத் தொடர்பாடல் நிர்மாண நிறுவனத்துடன் தொடர்புகளை வைத்திருக்கும் நாடுகள் அது குறித்து மீள் பரிசீலினை செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனத் தொடர்பாடல் நிர்மாண நிறுவனத்தினால் கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல்வேறு நிர்மாணப் பணிகள் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிர்மாண நிறுவனம் இந்திய பசுபிக் பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாகவும் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்துகின்றது.

இந்த நிலையில் குறித்த சீன நிறுவனத்தை அமெரிக்கா கறுப்புப் பட்டியலில் இணைத்ததுடன் அந்த நிறுவனம் சார்ந்தவர்களுக்கு தமது நாட்டிற்கு பிரவேசிக்காவண்ணம் தடையும் விதித்திருந்தது.

எனவே குறித்த நிறுவனத்தின் முறைகேடுகள் மற்றும் இறையாண்மை மீறலிலிருந்து நாடுகள் தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்கா கோரியுள்ளது

 

0/Post a Comment/Comments

Previous Post Next Post