கொரோனா 3 அலையில் வடக்கில் இதுவரை 12 நோயாளர்கள் அடையாளம் - மன்னாரில் மட்டும் 9 பேர் - Yarl Voice கொரோனா 3 அலையில் வடக்கில் இதுவரை 12 நோயாளர்கள் அடையாளம் - மன்னாரில் மட்டும் 9 பேர் - Yarl Voice

கொரோனா 3 அலையில் வடக்கில் இதுவரை 12 நோயாளர்கள் அடையாளம் - மன்னாரில் மட்டும் 9 பேர்
ஈதநீணீஆ மாகாணத்தில் இதுவரை 12 கொரோனா நோயாளர் இனம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னாரில் பட்டும் ஒன்பது பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் ஓர்  கொரோனா நோயாளி இனம்காணப்பட்ட நிலையில் நேற்று  முன்தினம்  ஐவரும் நேற்றைய தினம் மூவருக்கும்  கொரோனா தொற்று உறுதி் செய்யப்பட்டுள்ளது.

மன்னார்  மாவட்டத்தில்  ஒருவரிற்கு  கொரனா இனம் காணப்பட்டதனையடுத்து   150 பேர் உடனடியாகவே தனிமைப்படுத்தப்பட்டனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களிற்கு  பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வெள்ளிக் கிழமை  காலையில் 42 பேரிடமும்  மாலையில் 51 பேரிடமும் என மொத்தம் 93 பேரிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த 93  மாதிரிகளில் முதன் முதலாக இனம்காணப்பட்ட கொரோனா நோநாளியுடன் முதலாவது தொடர்பாளர்களான  42 பேரின்  மாதிரிகளின் முடிவுகளில்  நேற்று முன்தினம் 27 பேரினது முடிவுகள் வெளிவந்த நிலையில் அதில் ஐவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதன் எஞ்சிய 15 பேரின் முடிவுகள் நேற்றைய தினம் வெளிவந்தபோது அதில் மூவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இதேபோன்று இரண்டாம்நிலை தொடர்பாளர்கள் என இனம்காணப்பட்ட எஞ்சிய  51 பேரின் முடிவுகள் இன்று வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் மன்னார் மாவட்டத்தின் இரு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post