கூட்டமைப்பு பதிவு தொடர்பில் பங்காளிக் கட்சிகள் பேசவில்லை என்கிறார் சுமந்திரன் எம்பி - Yarl Voice கூட்டமைப்பு பதிவு தொடர்பில் பங்காளிக் கட்சிகள் பேசவில்லை என்கிறார் சுமந்திரன் எம்பி - Yarl Voice

கூட்டமைப்பு பதிவு தொடர்பில் பங்காளிக் கட்சிகள் பேசவில்லை என்கிறார் சுமந்திரன் எம்பி


தமிழத் தேசியக் கூட்டமைப்பு பதிவு தொடர்பில் கூட்டமைப்பின் கூட்டத்தில் பங்காளிக் கட்சிகள் பேசவில்லை என கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் நகரிலுள்ள தனது அலுவலகத்தில் சுமந்திரன் ஊடக சந்திப்பொன்றை நடாத்தினார். இதன் போது கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் கோரியிருப்பது தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவிக்கையில்..


கூட்டமைப்பின் கூட்டம் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. அதே போன்று கூடு;டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் இடம்பெற்றிரந்தது. ஆனால் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென அந்தக் கூட்டங்களில்; பேசப்படவில்லை. 

குறிப்பாக கூட்டமைப்பை பதீவு செய்ய வேண்டுமென சித்தார்த்தன் கோரியதாக நீங்கள் கூறுகின்ற போதிலும் அந்தக் கூட்டத்தின் சித்தார்த்தன் அதனைக் கேட்கவில்லை.

ஆகையினால் கூட்டமைப்பின் கூட்டத்தில் கேட்காமல் ஊடகங்களுக்கு இந்த விடயத்தை அவர் தெரிவித்திருக்கலாம். ஆக ஊடகங்களுக்கு அதனைத்த் தெரிவித்திருந்தாலும் கூட்டத்தில் அதனைத் தெரிவிக்கவில்லை. ஆகையினால் அதைப்பற்றி தெரியாது என்று பதிலளித்தார்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகிய பங்காளிக் கட்சிகள் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post