கோப்பாய் கல்வியற் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்ற நடவடிக்கை - Yarl Voice கோப்பாய் கல்வியற் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்ற நடவடிக்கை - Yarl Voice

கோப்பாய் கல்வியற் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்ற நடவடிக்கை


யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியல் கல்லூரி உள்பட நாட்டிலுள்ள பல கல்வியற் கல்லூரிகள் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்றது. 

இதேவேளை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்படவுள்ளது. இந்த நிலையில் இதற்கான வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதற்கமைய குறித்த கல்லூரிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் விடுமுறை வழங்கப்பட்டு ஆசிரியர்கள் மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு இராணுவத்தினரால் பாதுகாப்புடன் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா நோய் தாக்கம் மீண்டும் ஏற்பட்டுள்ளதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டு வருகின்ற நிலையில்இ தனிமைப்படுத்தலை மேற்கொள்வதற்காக தனிமைப்படுத்தல் நிலையங்களை அதிகரித்து வருகின்றனர்.

அதனடிப்படையில் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியும் தனிமைப்படுத்தல் நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post