வடக்கில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும் மாணவர் வருகை குறைவு - இரண்டாவது நாளிலும் 50 வீதத்தை தாண்டவில்லை என சுட்டிக்காட்டு - Yarl Voice வடக்கில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும் மாணவர் வருகை குறைவு - இரண்டாவது நாளிலும் 50 வீதத்தை தாண்டவில்லை என சுட்டிக்காட்டு - Yarl Voice

வடக்கில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும் மாணவர் வருகை குறைவு - இரண்டாவது நாளிலும் 50 வீதத்தை தாண்டவில்லை என சுட்டிக்காட்டு




கொரோனா அச்சத்தின் பின்பு நேற்று பாடசாலைகள் மீண்டும் ஆரம்பித்தன. இதில் வடக்கு மாகாணப் பாடசாசாலை மாணவர்களின் வரவு இன்றைய தினமும் 45 வீதத்தை தொடவில்லை என்றே அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டத்தின் 12 கல்வி வலயங்களிலும் உள்ள மாகாணப் பாடசாலைகளில் தரம் 6 முதல் உயர்தரம் வரையில் மொத்தமாக ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 855 மாணவர்கள் கல்வி கற்கும்போதும் நேற்று முன்தினம் 61 ஆயிரத்து 601 மாணவர்கள் மட்டுமே பாடசாலைக்கு சமூகமளித்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தின் எந்தப் பாடசாலையும் இயங்காத காரணத்தினால் எஞ்சிய ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 749 மாணவர்கள் கல்வி கற்கும்போதும் 56 ஆயிரத்து 67 மாணவர்கள் மட்டுமே பாடசாலைக்கு சமூகமளித்தனர்.

இவ்வாறு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இது 44.59 வீதம் என மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
[ads id="as1"]

0/Post a Comment/Comments

Previous Post Next Post