கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய கல்வி வலயம் உருவாக்க தீர்மானம் - Yarl Voice கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய கல்வி வலயம் உருவாக்க தீர்மானம் - Yarl Voice

கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய கல்வி வலயம் உருவாக்க தீர்மானம்




கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் ஒரேயொரு கல்வி வலயத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான எல்லை  தொடர்பில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தீர்மானம் எட்டப்பட்டது

கிளிநொச்சி மாவட்டம் முழுமையாக ஒரேயொரு கல்வி வலயத்தின் கண்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுவதனால் பாரிய நிதி நெருக்கடி, நிர்வாக நெருக்கடிகளுடன், வளப் பங்கீடுகள் தொடர்பிலும் நெருக்கடி நிலமையே உள்ளது . இதனை நிவர்ததி செய்யும் வகையில் கிளிநொச்சி வலய நிர்வாகத்தை குறைந்தது இரு நிர்வாகங்களாக பிரிக்க வேண்டும் என கடந்த 15: ஆண்டுகளாக கோரிக்கை விடப்படுகின்றது.

இது தொடர்பில் வலயத்தை இரண்டாகப் பிரிப்பதானால் எதன்ஙடிப்படையில் அதன் எல்லைகள் என்ன என்பதோடு அலுவலக அமைவிடம் எனப் பல விடயங்கள் தொடர்பில் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம.பெற்றது.

இக் கலந்துரையாடலில் மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் மாகாண கல்வி அமகச்சின் செயலாளர. இ.இளங்கோவன் ஆகியோர் தலமையில் இடம்பெற்றது. இதில் மாகாண, வலய, கோட்ட அதிகாரிகளுடன் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கல்வியாளர்களின் ஆலோசணைகளும் பெறப்பட்டது.

இதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போதுள்ள நான்கு கோட்டங்களான கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிளைப்பள்ளிகளில் கரைச்சிக் கோட்டத்தை தனியாகவும் ஏனைய 3 கோட்டங்களையும் உள்ளடக்கி பரந்தனில் இரண்டாவது வலயத்தை அமைப்பதே பொருத்தமானதும் சாத்தியப்பாடானதும் என தீர்மானிக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post