உலக மீனவர் தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது - Yarl Voice உலக மீனவர் தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது - Yarl Voice

உலக மீனவர் தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது உலக மீனவர் தின நிகழ்வு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரின் ஏற்பாட்டில் உரும்பிராயில்  இடம்பெற்றது

23 வது உலக மீனவர் தின நிகழ்வு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரின் ஏற்பாட்டில் உரும்பிராயில்  இடம்பெற்றது. "நிலப் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மக்களுடைய உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக பலமான சமூக இயக்கத்தை கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

வேலை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்

குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக தற்போதைய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் உலக மீனவர் தின நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் இன்பராஜா தற்போதைய சூழ்நிலையில் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளார்கள் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

 அதாவது மீன்களில் இருந்துகொரோனா தொற்று ஏற்படும் என பொய்யான வதந்திகள் பரப்பப்படுகிறது இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப் படுகின்றது எனவே இந்த விடயத்தினை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் போதியளவு விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அவித்து உண்ணும் கடல் உணவுகளில் கொரோனா தொற்று ஏற்படாது என வைத்திய துறையினர் தெரிவிக்கின்றார்கள்.

 எனினும் பொதுமக்கள் மத்தியில் பூரணமான விழிப்புணர்வு இல்லை என தெரிவித்ததோடு மேலும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்  வடபகுதியில்நீண்ட காலங்களாக இடம்பெயர்ந்தோர் தொடர்பான விடயங்கள் மீள்குடியேற்றம் மற்றும் மனித உரிமை தொடர்பான விடயங்கள்.

இந்திய மீனவர்களின்அத்துமீறல்களு போன்ற பல்வேறு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் பொதுமக்களுடன் இணைந்து பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது 

அதன் ஒரு அங்கமாக இன்றைய தினம் உலக மீனவர் தினத்தினை நாங்கள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுகின்றோம் எனினும் தொடர்ச்சியாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தேசிய ஒத்துழைப்பு இயக்கம்  தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் யாழ் மாவட்டத்தில் சிறப்பாக சமூக சேவை புரியும் இருவர் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் இன்றைய உலக மீனவர் தினத்தில் கௌரவிக்கப்பட்டார்கள்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post