மாணவர்களின் நன்மை கருதி கல்வித் தொலைக்காட்சி சேவை - மூன்று மொழிகளிலும் ஒளிபரப்ப நடவடிக்கை - Yarl Voice மாணவர்களின் நன்மை கருதி கல்வித் தொலைக்காட்சி சேவை - மூன்று மொழிகளிலும் ஒளிபரப்ப நடவடிக்கை - Yarl Voice

மாணவர்களின் நன்மை கருதி கல்வித் தொலைக்காட்சி சேவை - மூன்று மொழிகளிலும் ஒளிபரப்ப நடவடிக்கை

நாட்டில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளதால் இப்போது பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது என்ற நிலையில் மாணவர்களின் நன்மை கருதி கல்வித் தொலைக்காட்சி சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

தரம் 3 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக இந்த கல்வி ஒளிபரப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்த கல்வி ஒளிபரப்பு நடத்தப்படவுள்ளது. 

இது தொடர்பாக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post