வல்வெட்டிதுறையில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் காயம் - வீடுகள் வாகனங்கள் சேதம் - Yarl Voice வல்வெட்டிதுறையில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் காயம் - வீடுகள் வாகனங்கள் சேதம் - Yarl Voice

வல்வெட்டிதுறையில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் காயம் - வீடுகள் வாகனங்கள் சேதம்
வல்வெட்டிதுறையில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் அங்கிருந்த வாகனம் மற்றும் அருகிலுள்ள வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

வல்வெட்டித்துகை ஊரிக்காடு பகுமியிலுள்ள கோழிப் பண்ணையில் தீவனம் தயாரிக்கும் பொயிலர் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.

பாரிய சத்தத்துடன் சுமார் 300 மீற்றர் தூரம் இந்த சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அதே நேரம் அங்கு தரித்து நின்றிருந்த வாகனமொன்றும் பலத்த சேதமடைந்துள்ளதுடன் அருகிலுள்ள சில வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த பண்ணையில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் எட்டு மாதத்திற்கு முன்னர் ஒருவர் உயிரிழந்திருந்த்தும் குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post