உடுவிலில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் - Yarl Voice உடுவிலில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் - Yarl Voice

உடுவிலில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர்
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மேலும் பெண் ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

உடுவில் - சங்குவேலியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கே கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையில் இன்றிரவு அறிக்கையிடப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனையில் உணவகம் ஒன்றில் பணியாற்றும் தந்தையிடம் சென்று திரும்பிய தாய் மற்றும் மகள் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரிடமும் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன.


அவர்களில் மகளுக்கு  கோவிட் -19 நோய் உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் உடுவில் அம்பலவாணர் வீதி - உதயசூரியன் சந்தியில் தாய் மற்றும் 2 வயது மகளுக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post