கொரோனா அச்சம் காரணமாக மறு அறிவித்தல் வரை நெடுந்தீவிற்கான படகு சேவை இடைநிறுத்தம் - பிரதேச செயலர் அறிவிப்பு - Yarl Voice கொரோனா அச்சம் காரணமாக மறு அறிவித்தல் வரை நெடுந்தீவிற்கான படகு சேவை இடைநிறுத்தம் - பிரதேச செயலர் அறிவிப்பு - Yarl Voice

கொரோனா அச்சம் காரணமாக மறு அறிவித்தல் வரை நெடுந்தீவிற்கான படகு சேவை இடைநிறுத்தம் - பிரதேச செயலர் அறிவிப்பு
கொரோனா அச்சம் காரணமாக மறு அறிவித்தல் வரையில் நெடுந்தீவிற்கான பயணிகள் படகு சேவை இடம்பெற மாட்டாது என பிரதேச செயலாளர் சத்தியசோதி தெரிவித்தார்.

நெடுந்தீவின் கொரோனா நிலபை தொடர்பில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற முன்ஙாயத்தக் கூட்டத்தில் அனைவரின் ஒப்புதலுடன் மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டது.

இதன் அடிப்படையில் தீவில் வாரும் மக்களிற்கான பொருட்களின் படகு சேவை இடம்பெறும் அதே நேரம் பயணிகள் சேவை இடம்பெற மாட்டாது. மறு அறிவித்தல்வரையில் இது நடைமுறையில் இருக்கும் இருப்பினும் இந்த தடை எதிர்வரும் 14ம் திகதி வரையில் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு விதிக்கப்ப்டுள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்பில் நிலமைக்கேற்ப  சகல திணைக்கள தலைவர்கள் , பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் , மத தலைவர்களின் பங்கு பற்றுதலுடன் கூடிய கலந்துரையாடலில் முடிவு எட்டப்படும் . என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post