இந்தியாவிலிருந்து கடல்வழியாக யாழிற்கு தப்பி வந்தவர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் - Yarl Voice இந்தியாவிலிருந்து கடல்வழியாக யாழிற்கு தப்பி வந்தவர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் - Yarl Voice

இந்தியாவிலிருந்து கடல்வழியாக யாழிற்கு தப்பி வந்தவர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல்


இந்தியாவின் இராமேஸ்வரம் ஈழத் தமிழர் அகதி முகாமில் இருந்த ஒருவர் தப்பி ஓடி வந்து கீரிமலையில் நின்ற சமயம் நேற்றைய தினம் இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இந்தியாவில் இருந்து 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கி தலைமன்னார் கடற்கரையில் 2ஆம் திகதி அதிகாலை கரை இறங்கியுள்ளார். இவ்வாறு கரை இறங்கியவர் அங்கிருந்து மன்னார் நகரை அடைந்துள்ளார். 

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் கீரிமலைக்குச் செல்வதற்கு பேரூந்தில் பயணிக்கும் சமயம் அகப்பட நேரிடும் எனக் கருதி முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.

இவ்வாறு வாடகைக்கு அமர்த்திய முச்சக்கர வண்டிக்கு 8 ஆயிரம் ரூபா பணம் வழங்கி கீரிமலையில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

இது தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது சகோதரியின் குடும்பமும் இந்தியாவில் இருந்து வருகை தந்த 28 வயது இளைஞரான ஜெகநாதன் -ஜெனன் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post