கொரோனா தொற்று சிகிச்சை நிலையம் கிளிநொச்சியில் நாளை திறப்பு - Yarl Voice கொரோனா தொற்று சிகிச்சை நிலையம் கிளிநொச்சியில் நாளை திறப்பு - Yarl Voice

கொரோனா தொற்று சிகிச்சை நிலையம் கிளிநொச்சியில் நாளை திறப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் கிருஷ;ணபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட

கொரோனா தொற்றுநோய்குரிய புதிய சிகிச்சை நிலையம் நாளை 11.11.2020 ஆம் திகதி காலை 11.00 மணிக்கு அங்குரார்பணம் செய்யப்பட
இருக்கின்றதhக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

இச்சிகிச்சை நிலையம் 200 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய வசதிகளை உடையது. இச்சிகிச்சை நிலையமானது மத்திய சுகாதார அமைச்சின் வழிகாட்டல் மற்றும் சிபாரிசுடன் உலக வங்கியின் நிதி
உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வடமாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைரூபவ் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மாங்குளம் ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில்
கொரோனா சிகிச்சை நிலையங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. 

எதிர்காலத்தில் இச்சிகிச்சை நிலையமானது வடமாகாணத்தின் தொற்று நோய் சிகிச்சை வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்யப்படும்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post