யாழ்ப்பாணம் மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு - Yarl Voice யாழ்ப்பாணம் மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு - Yarl Voice

யாழ்ப்பாணம் மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சோகச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

மண்டைதீவைச் சேர்ந்த 7 வயதுடைய சாவிதன் மற்றும் 5 வயதுடைய சார்வின் ஆகிய இருவருமே கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன அதே வேளை 
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post