உடுவில் பிரதேச முடக்கம் தளர்த்தப்பட்டது - மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice உடுவில் பிரதேச முடக்கம் தளர்த்தப்பட்டது - மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice

உடுவில் பிரதேச முடக்கம் தளர்த்தப்பட்டது - மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவிப்புஉடுவில் பிரதேச முடக்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தளர்த்தப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்
அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக உடுவில் பிரதேசத்தின் பல கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் முடக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலைமையில் இன்றைய தினமும் மேலும் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேசம் உள்ளிட்ட வேறு சில இடங்களும் முடக்கப்படலாம் என்ற அச்ச நிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டு இருந்தது.

அவ்வாறான நிலைமையில் தான் ஏற்கனவே முடக்கப்பட்ட உடுவில் பிரதேசம் உடனடியாக அமுல் படுத்தும் வகையில் முடக்கத்தில் இருந்து  தளர்த்தப் படுவதாக மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

மேலும் உடுவில் பிரதேச த்தில்
தனிமைப்படுத்தப்பட்ட 398 குடும்பங்கள் இரு வாரம் தனிமைப்படுத்தலில் இருப்பர் என்றும் 

மருதனார்மடம் சந்தை அதனைச் சூழவுள்ள பகுதி வர்த்தக நிலையங்கள் இரு வாரம் இயங்காது ஏன்றும் 

தெல்லிப்பளை மற்றும் உடுவில்க் கோட்டப் பாடசாலைகள் இரு வாரம் இயங்காது ஏன்றும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post