பருத்தித்துறை மந்திகை நெல்லியடி வியாபாரிகளில் எவருக்கும் தொற்று இல்லை - சுகாதாரப் பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice பருத்தித்துறை மந்திகை நெல்லியடி வியாபாரிகளில் எவருக்கும் தொற்று இல்லை - சுகாதாரப் பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice

பருத்தித்துறை மந்திகை நெல்லியடி வியாபாரிகளில் எவருக்கும் தொற்று இல்லை - சுகாதாரப் பணிப்பாளர் அறிவிப்பு


பருத்தித்துறை நெல்லியடி மந்திகை ஆகிய 3 சந்தை வியாபாரிகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பொதுச் சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக மாவட்டத்தின் ஏனைய சந்தை வியாபாரிகளுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கமைய மருதனார்மடம் திருநெல்வேலி சங்கானை சுன்னாகம் பொதுச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிலருக்கு கொரோனா  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பருத்தித்துறை நெல்லியடி மந்திகை ஆகிய சந்தை வியாபாரிகளுக்கும் நீர்கொழும்பு கட்டுநாயக்க விமான நிலைய ஆய்வுகூடத்தில் பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டடது.

இதில் மேற்படி மூன்று சந்தை வியாபாரிகளில் எவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post