மருதனர்மடம் பொதுச்சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய மூவருக்கு யாழில் இன்றும் கொரோனா - Yarl Voice மருதனர்மடம் பொதுச்சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய மூவருக்கு யாழில் இன்றும் கொரோனா - Yarl Voice

மருதனர்மடம் பொதுச்சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய மூவருக்கு யாழில் இன்றும் கொரோனாமருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் மூவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மருதனார்மடம் பொதுச் சந்தை உடன் தொடர்புடைய பலருக்கும் பல்வேறு இடங்களில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய பரிசோதனையில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் திருநெல்வேலி பொதுச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் மருதனார்மடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவருக்கும் என இன்றைய தினம் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post