ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளுக்கு ராஐபக்ச அரசாங்கம் பதில் கூற வேண்டும் - சரவணபவன் வலியுறுத்து - Yarl Voice ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளுக்கு ராஐபக்ச அரசாங்கம் பதில் கூற வேண்டும் - சரவணபவன் வலியுறுத்து - Yarl Voice

ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளுக்கு ராஐபக்ச அரசாங்கம் பதில் கூற வேண்டும் - சரவணபவன் வலியுறுத்து


தமிழ்த் தேசியத்தை அடக்கி ஒடுக்க அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதற்கு ராஐபக்ச அரசாங்கம் பதில் கூற வேண்டுமென தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் இத்தகைய அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள அனைவரும் ஒரணியில் திரள வேண்டுமென கோரியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். அந்தச் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

ஊடகங்களை அடக்கி ஒடுக்குகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கமையவே பத்திரிகைக்கு எதிராக வழக்கு தொடர்ப்பட்டிருக்கின்றது. இவ்வாறு வழக்கு பாடுவதென்பது ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறையாகவே பார்க்கப்படுகின்றது.

இதனடிப்படையிலையே பெலிஸார் வழக்கு போட்டுள்ளனர். இதற்கு இங்குள்ள சில அரசில் பின்புலமும் இருக்கலாம். வலிகிழக்கில் என்ன நடந்தது என்பது இங்குள்ள பலருக்கும் தெரியும். ஆனல் அங்கு என்ன நடந்தது என்று பிரதம மந்திரிக்கே தெரியாமல் சில அரசியல் தரப்புக்கள் அந்த விடத்தை தூண்டியிருந்தன.

அதே பேன்று சில தரப்புக்கள் பின்புலத்தில் நின்று செயற்படலாம். எது எவ்வாறு இருப்பினும் தமிழ்த் தேசியத்தின்பால் செயற்படுகின்ற ஊடகங்கள் மீது ஆராஐக அடக்குமுறைகளை பிரயேகிக்கும் வகையிலையே இந்தச் செயற்பாடுகள் அமைகின்றன. குறிப்பாக தமிழ்த் தேசியத்தின்பால் செயற்படுகின்ற ஊடகங்களுக்கு ராஐபக்ச அரசாங்கம் எச்சரிக்கை விடுக்கின்றது.

தமிழ் மக்களையும் தமிழ் தேசிய ஊடகங்களை அச்சுறுத்தி தமிழ்த் Nதிசியத்தை அடக்கி ஒடுக்கலாமென நினைக்கின்றனர். இவ்வாறு செய்வதனூடாக எதிர்காலத்தில் பலர் பின்வாங்குகின்ற நிலைமை ஏற்படலாம். ஆனால் வரும் பின்வாங்க கூடாது. ஊடகங்கள் தான் தமிழ் மக்களை வழிநடத்தி கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களுக்கு மிக அருகில் ஊடகங்கள் இருக்கின்றன. 

ஆகவே இது உதயனுக்கு என்று பாராமல் எல்லோரும் ஒன்றினிக்க வேண்டிய நேரம வந்துவிட்டதென்றே நான் நினைக்கிறேன். குறிப்பாக பிட்டு சாப்பிட்ட மக்;களை பீட்சா சாப்பிட வைத்தேன் என்று சொன்னவர் வெருட்டுவதற்காக வழக்கு போட்டுள்ளார். அவர் மிக துணிவாக எதையும் சொல்லாம் செய்யலாம் என்ற நினைக்கின்றார். 

அதே நேரத்தில் அவருக்கு பின்னால் யாரும் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றனரோ என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. எனினும் இத்தகைய ஊடக அடக்குமுறைக்கு ராஐபக்ச அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் இருக்கும் போது நூறுவீதம் இல்லாவிட்டாலும் மிக வெளிப்படையாக தங்களது கருத்துக்களை ஊடகங்களில் வெளியிடப்பட்டன. அதில் சாதகம் பாதம் எதவானாலும் எல்லாவற்றுக்கும் இடமிருந்தது.ஆனால் இந்த அரசாங்கம் அடக்குமுறையை தொடங்குகின்றனர். 

இதே வேளை கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள் தாக்கப்பட்டார்கள். ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இவை தொடர்பாக எத்தனையோ முறைப்பாடுகள் செய்தோம். விசாரணைகள் நடைபெற்றன. ஆனால் அதற்கான நீதி வழங்கப்பட்டதா? குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனரா? ஊடகவியிலாளர் படுகொலை துன்பங்களுக்கு ஏதாவது ஒன்று அரசால் நிருபிக்கப்பட்டதா த்ண்டனை கொடுக்கப்பட்டதா என்று பார்த்தால் அப்படி ஏதுமே இல்லை.

ஆகவே பொhலிஸாரும் அரசும் சேய்ய வேண்டிய நீதியான செயற்பாட்டை செய்யாமல் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவையை செய்யாமல் உங்களுக்கு சாதகமில்லை என்றால் பழிவாங்க முனைகிறீர்களா? ஆடக்கி ஒடுக்க முனைகிறீர்களா? இவ்வாறு செய்வதனூடாக தமிழ்த் தேசியத்திற்கு முட்டுக்கட்டை போட முனைகிறீர்களா?

இவ்வாறு அடக்குமுறைகளினூடாக எச்சரிக்கை  விடுக்க பார்க்கின்றனர். ஆகவே தமிழ்த் தேசியத்தின்பால் செயற்படுகின்ற அனைத்து தரப்பினர்களும்; ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post