பலாலி விமான நிலையத்தை மூடுவதற்கு அரசு முயற்சி - விமான நிலையத்தில் தொடர்ந்து இயங்க வைக்க வேண்டுமென சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை - Yarl Voice பலாலி விமான நிலையத்தை மூடுவதற்கு அரசு முயற்சி - விமான நிலையத்தில் தொடர்ந்து இயங்க வைக்க வேண்டுமென சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை - Yarl Voice

பலாலி விமான நிலையத்தை மூடுவதற்கு அரசு முயற்சி - விமான நிலையத்தில் தொடர்ந்து இயங்க வைக்க வேண்டுமென சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கைபலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகவே அல்லது பிராந்திய விமான நிலையமாகவே தொடர்ந்து செயற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறோமச்சந்திரன் பலாலி விமான நிலையத்தை மூடுவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிடவேண்டும் மேலும் இந்த நடவடிக்கைக்கு எதிராக வடக்கு கிழக்கில் இருந்து அமைச்சர்களாக இருப்பவர்கள் அரசாங்கத்துடன் இருப்பவர்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஏனை பாராளுமன்ற உறு்பபினர்கள் இதற்காக குரல் கொடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடகவியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

பலாலி விமான நிலையம் என்பது பிரித்தானியா இலங்கையை ஆண்ட காலத்தில் பிரித்தானிய அரசாங்கத்தினால் தமது விமானப்படைக்காக கட்டப்பட்ட ஒரு விமான நிலையம் அதற்கு பின்பாக விமான நிலையம் என்பது கொழும்பு பலாலி மற்றும் பலாலியில் இருந்து திருச்சிக்கு சேவையாற்றிய விமான நிலையமாக இருந்து வந்தது. யுத்த காலத்தில் மீண்டும் இலங்கையின் விமான நிலையமாக மாறியிருந்தது. அதேவேளை ரத்மலானை கொழும்புக்குமான போக்குவரத்து விமான நிலையமாக இடம்பெற்று வந்தது.

2009 ஆம் ஆண்டுக்குப்பின்னர் 2019 ஆம் ஆண்டு தமிழ்க் கட்சிகளினால் இலங்கை இந்திய அரசாங்கங்களிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக மாற்றப்பட்டது இந்திய அரசாங்கம் இதற்காக 300 மில்லின் ரூபாவை வழங்கியிருந்தது சிறிய விமானங்கள் வந்து இறங்கும் விமான நிலையமாகவும் சென்னைக்கும் யாழ்ப்பாணம் பலாலிக்கும் இடையில் நடத்தும் விமான நிலையமாகத்தான் இருந்து வந்தது யாழ்ப்பாணம் சர்வதேச நிலையமாக அழைக்கப்பட்டு அங்கு தமிழ் முதல் மொழியாக அறிவிப்புப் பலகைகளில் இருந்தது பாரிய பிரச்சினையாக விமல் வீர வன்ச போனறவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அந்த விமான ஓடு பாதையை நீளமாக்குவதன் மூலம் தான் பெரிய விமானங்கள் குறிப்பாக 100 150 இற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து இறங்கக்கூடிய விமான நிலையமாக மாற்றவேண்டும் என்ற அடிப்படையில் இந்திய அரசாங்கம் மேலதிகமாக இன்னும் 300 மில்லியன் ரூபாக்களை அபிவிருத்தி செய்வதற்காக வழங்கியிருந்தது.

பணம் வழங்கி ஒரு வருடம் கடந்த நிலையிலும் கொரோனா காலத்திலும் இதனை அபிவிருத்தி செய்திக்கமுடியும் ஆனால் அந்த நிதி எந்த அபிவிருத்தியும் செய்யப்படாது அபிவிருத்திகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு நிதி பயன்படுத்தப்படாது அரசாங்கத்திடமே உள்ளதை அவதானிகக்க்ககூடியதாகவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு கிடைத்த ஒரே ஒரு அபிவிருத்தி நிதி என்பது குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர்ந்து வாழும்சுமார் 15 இலட்சம் தமிழ் மக்கள் உலக நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். அதுமட்டுமன்றி இந்தியாவில் வாழும் எமது மக்கள் சுமார் ஒரு லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றார்கள் இதனை விட இந்திய வாழ் மக்கள் வாழ்கின்றார்கள் குறிப்பாக இதனை பிராந்திய நிலையமாக மாற்றுகின்றபோது நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புக்கள் அபிவிருத்திகள் சுற்றுலாப் பயணிகள் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் அதன் ஊடாக சுற்றலா விடுதிகள் கொட்டல்கள் அபிவிருத்தி அடைகின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றது. இன்று அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவுகளின் படி நாங்கள் அறிகின்றோம் அரசாங்கம் மீண்டும் இந்த விமான நிலையத்தை மூட இருப்பதாக அறிகின்றோம் சர்வதேச போக்குவரத்துக்கு அல்லது பிராந்திய போக்குவரத்துக்கு விமான நிலையத்தை மூடவுள்ளதாக அறிகின்றோம். இது உண்மையாகவே வடக்கு கிழக்குக்கு அபிவிருத்தி மாத்திரம் இருந்தால்போதும் தமிழ்க் மக்களுக்கு வேறு எந்த தேவைகளும் இல்லை எனக்கூறும் அரசாங்கம் யுத்த்த்திற்கு பிற்பாடு கிடைத்த ஒரே ஒரு அபிவிருத்தியை இல்லாது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளப்படுகின்றது. நாங்கள் வேலைவாய்ப்பு கொடுப்போம் அபிவிருத்தி செய்வோம் என்று கூறி பாராளுமன்றம் சென்றவர்கள் இவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவாக இருக்கலாம் அங்கஜன்னாக இருக்கலாம் இவர்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அபிவிருத்தியும் வேலைவாப்பும் என்பதே ஆனால் இந்திய அரசாங்கத்துடன் கிடைத்த இந்த அபிவிருத்தி என்பதே முழுமையாக எங்களின் கையைவிட்டுப் போகக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது ஆகவே அபிவிருத்தி என்று வந்த அரசாங்கமும் சரி அரசாங்கத்துடன் ஒத்து இருக்கக்கூடிய அமைச்சர்களும்ச ரி ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றாலும் சரி யார் என்றாலும் சரி இந்த விடயம் தொடர்பாக உடனடியதக அரசுடன் பேசி கோடுக்கப்பட்ட அந்த முன்னூறு மில்லின் ரூபாக்குளும் பலாலி விமான நிலைய ஓடுதளம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் பயணிகள் வரும் வாகனங்கள் நிறுவத்துவதற்கு வசதிகள் கொடுக்கப்படவேண்டும் பயணிகளுக்கு சில வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும் இப்படியாக பல்வேறு பட்ட தேவைகள் இருக்கின்றது.எனவே இதனை உடனடியாக செய்யப்படவேண்டும்

கடந்த காலத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் ஒரு விமான நிலையம் அதனை பிராந்திய விமான நிலையமாக மாற்றினார்கள் ஆனால் சென்னைக்கும் பலாலிக்குமான போக்குவரத்து பயணச்சீட்டின் விலை கொழும்பில் இருந்து சென்னைக்கு செல்வதிலும் பார்க்க மிக அதிகமாக இருந்தது இதனை கேட்டபோது இங்கு பலாலிக்கான வரி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்திற்கோ இல்லாத அளவுக்கான வரிகள் பலாலி விமான நிலையத்திற்கு அதிகரிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் கொழும்பில் இருந்து 30 கிலோகிராம் பொருட்கள் கொண்டு செல்லமுடியும் ஆனால் பலாலியில் இருந்து 23 கிலோகிராம் பொருட்கள் தான் கொண்டு செல்லமுடியும் என்று இருந்தது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு கூடுதலான சலுகைகள் வழங்கி விமான நிலையங்களுக்கான போக்குவரத்துக்களை அதிகரித்து அப்பகுதிகளின் அபிவிருத்திகளை மேற்கொண்டு அழிவடைந்த பிரதேசத்தை வளப்படுத்துவதும் வேலைவாய்ப்புக்களை அதிகரிகப்பதற்கு பதிலாக அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் முன்னரும் அதற்கு எதிராக இருந்தது இன்று இவை எல்லாவற்றையும் தாண்டிப்போய் விமான நிலையத்தையே மூடும் நிலைக்கு வந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஒக்டேபர் மாதம் விமான நிலையம் திறக்கப்பட்டது ஒரு வருடமாக கொரோ காரணதாக மூடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூடுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுத்து வருவதாக நாங்கள் அறிகின்றோம். ஏறத்தாள 15 இலட்சம் புலம்பெயர் மக்கள் பலாலி விமான நிலையத்தை பாவிக்கக்கூடிய நிலையில் இருந்தது அதேபோன்று தமிழகத்தில் இருக்கின்ற எங்களின் மக்கள் மற்றம் இந்திய மக்கள் பயன்படுத்தக்கூடிய நிலைய இருந்தது பலாலி விமான நிலையம் முறையாக பயன்படுத்தப்படுமேயானால் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி என்பது இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் ஆகவே அவ்வாறான விடையங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவேண்டும் வெறுமனே வாய்மூலம் அபிவிருத்திக்காக வந்துள்ளோம் என்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்போம் என்றும் கூறும் அரசாங்கம் உள்ளதையும் இல்லாது செய்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது ஏற்றக்கொள்ளத்தக்க விடையம் அல்ல ஆகவே வடக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருப்பவர்கள் அபிவிருத்தி பற்றி பேசுபவர்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவோம் என்று கூறும் ஏனைய தமிழக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதனை முக்கிய பிரச்சினையாக கருதி உடனடியாக அரசு இந்தியா வழங்கிய 300 மில்லியன் ரூபாய்க்களையும் பலாலி விமான அபிவிருத்திக்கு செலவு செய்ய வேண்டும் என்பது மாத்திரம் அல்ல அது தொடர்ச்சியாக சர்வதேச அல்லது பிராந்திய விமான நிலையமாக இயங்குவதற்கு சகல நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்கவேண்டும் தமிழ் மக்களுக்கு கிடைத்த அற்ப அபிவித்தியை இல்லாது செய்கின்ற நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post