இந்திய மீனவர்கள் அத்துமீறுவதை அனுமதிக்க முடியாது - அதற்காக உயிர் பறிப்பது ஏற்புடையதல்ல கூட்டணியின் அரவிந்தன் தெரிவிப்பு - Yarl Voice இந்திய மீனவர்கள் அத்துமீறுவதை அனுமதிக்க முடியாது - அதற்காக உயிர் பறிப்பது ஏற்புடையதல்ல கூட்டணியின் அரவிந்தன் தெரிவிப்பு - Yarl Voice

இந்திய மீனவர்கள் அத்துமீறுவதை அனுமதிக்க முடியாது - அதற்காக உயிர் பறிப்பது ஏற்புடையதல்ல கூட்டணியின் அரவிந்தன் தெரிவிப்புஇந்திய தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்தொழில் செய்வதை அனுமதிக்க முடியாது இதனை அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் அவர்கள் அத்துமீறி வருகிறார்கள் என்பதற்காக அவர்கள் உயிர் பறிப்பது ஏற்புடையது அல்ல என்று யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ச.அரவிந்தன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (26) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபிலே அவர் இதனைத் தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில் 
இந்திய மீனவர்கள் அத்து மீறி தொழில்செய்வதை இலங்கை இந்திய நாட்டு அரசாங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தடுத்து நிறுத்துவதற்கு முன்வரவேண்டும். இதனை விடுத்து தமிழக மீனவர்களையும் இலங்கை வடபகுதி மீனவர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல. இதனை இருநாட்டு மீனவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். 

தற்போதைய சூழலில் ஜெனிவா விவகாரம்   இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ள சூழலில் அதனை திசை திருப்புவதற்காக வடபகுதி மக்கள் இதற்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை காண்பிப்பதற்காக அரசாங்கமும் அரசாங்க பிரதிநிதிகளும் வடபகுதியில் சில போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள் இந்த விடயங்களை தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும்  வடபகுதி மீனவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அது மட்டுமன்றி இந்திய அரசாங்கமும் இதனை புரிந்து கொண்டு இலங்கை தமிழ் மக்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும்.

குறிப்பாக ஐ நா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாட்டிற்கு தனது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும்.

இந்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் இந்தியாவை பகைப்பதற்காக பல்வேறு வகையான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில்  தீவக பகுதியி்ல் மின்சாரம் வழங்குவதற்காக சீன நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  இது இந்தியாவிற்கே  பாதிப்பு இந்தியாவிற்கு அருகாமையில் உள்ள தீவுகளில் இத்தகைய செயற்பாடு தமிழகத்திற்கும் வடபகுதிக்குமே பாதிப்பு 

நாளை (27) புதன்கிழமை யாழ்மாவட்டத்தில் மீனவர் போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு பல மீனவர் சமாச பிரதிநிதிகள் மற்றும் மாணவ ஒன்றிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய போது இப்போராட்டத்திற்கு நாம் ஆதரவு வழங்கவில்லை என தெரிவித்ததுடன் அரச நிகழ்ச்சி நிரலில் இவை இடம்பெறுவதால் நாம் இதில் பங்குபற்றமாட்டோம் எனத் தெரிவித்தார்கள்.

ஒரு சிலரின் நிகழ்சி நிரலுக்காக இத்தகைய போராட்டங்கள் இடம்பெறுவது ஏற்புடையதல்ல. ஜ.நா மனித உரிமை பேரவை இடம்பெறவுள்ள சூழலில் வடபகுதியில் இடம்பெறும் போராட்டங்கள் யாரால் ஏற்பாடு செய்யப்படுகிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்தியா இலங்கை தமிழர்களின் நிலமையை புரிந்து கொண்டு இனப்பிரச்சினைகளை தீர்த்துவைக்க ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post