கஷ்டப் பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபரணங்கள் வழங்கல்! - Yarl Voice கஷ்டப் பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபரணங்கள் வழங்கல்! - Yarl Voice

கஷ்டப் பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபரணங்கள் வழங்கல்!




சுவிஸில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர் சங்கரப்பிள்ளை பற்குணராஜா அவர்களின் 50 ஆவது பிறந்த தினமான இன்று (2021.02.13) தாயகத்தில் வெண்கரம் அமைப்பின் ஊடாக உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

சுன்னாகம் சங்கத்தமிழன் சமூக மேம்பாட்டுக்கழகத்தின் படிப்பகத்தில் கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் தளபாடங்களும் வழங்கப்பட்டன. அத்துடன், க.பொ.த சாதாரணதர  மாணவர்களுக்கான புதிய வகுப்பும் ஆரம்பிக்கப்பட்டது. 

மேலும், யாழ்.புறநகர் பொம்மைவெளி நித்தியஒளியில் வசிக்கும் முதியோருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. 

அத்துடன், பொம்மைவெளி நித்திய ஒளி முன்பள்ளியில் வசித்து இவ்வருடம் தரம் 01 இற்கு செல்லும் மாணவர்களுக்கு புத்தகப் பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. 2020 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். 

வட்டுக்கோட்டை – முதலியகோயிலடியில் உள்ள வெண்கரம் படிப்பகத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கான கொடுப்பனவும் வழங்கப்பட்டது. 

மேற்படி உதவித்திட்டத்தை சுவிற்சர்லாந்தில் வசிக்கும் வைகுந்தன் செல்வம் ஒழுங்கமைத்திருந்தார். இவற்றை வழங்கும் வைபவங்கள் இன்றைய தினம் (13.02.2021) மிக எளிமையாக நடைபெற்றன.  

வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன் மற்றும் வெண்கரம் செயற்பாட்டாளர்கள் இதில் கலந்துகொண்டு உதவிகளை வழங்கினர். 

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சங்கரப்பிள்ளை சற்குணராசா தாயகத்தில் நெடுந்தீவில் பிறந்து வவுனியா சிவபுரத்தில் வசித்துவந்த நிலையில் தற்போது சுவிற்சர்லாந்தில் வசிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post