பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதில் இந்தியா அக்கறை செலுத்த வேண்டும் - இந்திய தூதுவரிடம் தமிழ் மக்கள் கூட்டணி கோரிக்கை - Yarl Voice பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதில் இந்தியா அக்கறை செலுத்த வேண்டும் - இந்திய தூதுவரிடம் தமிழ் மக்கள் கூட்டணி கோரிக்கை - Yarl Voice

பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதில் இந்தியா அக்கறை செலுத்த வேண்டும் - இந்திய தூதுவரிடம் தமிழ் மக்கள் கூட்டணி கோரிக்கை



13 ஆவது திருத்தம் போதுமானதில்லை. சமஷ்டி முறையிலான ஆட்சி அதிகாரங்களே எமக்கு தேவை. அது தான் இந்த நாட்டினைப் பொறுத்தவரையில் சரியான ஒரு ஆட்சி முறையாக இருக்குமென இந்திய உயரஸ்தானிகரிடத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தெரிவித்துள்ளது.

இலங்கை விடயம் தொடர்பில் ஜெனீவாவில் வரப்போகும் தீர்மானம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியா கவனம் செலுத்துமென்றும்; தூதுவர் தெரிவிதததாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.;

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், வட மாகாண முன்னாள் அமைச்சர் ஆனந்தி சசிதரன், சிற்பரன் ஆகியோர் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவை கொழும்பில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச் சந்திப்புத் தொடர்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவிக்கையில்:-

இந்திய உளர்ஸ்தானிகருக்கும் எமக்கும் இடையில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது பல்வேறு வடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மாகாண சபை ஆட்சிக்காலத்தில் அரசாங்கம் நடந்து கொண்ட முறைகள், மாகாண சபைக்கு உள்ள அதிகாரங்களை எந்தளவு தூரம் அரசாங்கம் பறித்துக் கொண்டது என்பது தொடர்பாகவும், வடக்கு,கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் அரசாங்கம் எவ்வாறான விடயங்களை கையாளுகின்றது என்பது தொடர்பில் பேசப்பட்டது.

அத்துடன் மாகாண சபைக்கு கீழ் இருந்த அரச அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்கள் எவ்வாறு மத்திய அரசாங்கத்திற்கு கீழ் கொண்டு செல்லப்பட்டது என்பது தொடர்பாகவும் பேசப்பட்டது.

தமிழர் தாயத்தில் தொடர்ச்சியான காணி பறிப்பு, தமிழ் மக்களின் இருப்பு எவ்வாறு இல்லாமல் செய்யப்படுகின்றது போன்ற விடயங்கள் தொடர்பிலும் எங்களால் எடுத்துக் கூறப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்வதாக இந்த அரசாங்கம் சொல்லிக் கொண்டு இங்கிருக்கின்ற காணிகளை சீன நிறுவனங்களுக்கும், சிங்கள முதலாளிகளுக்கு கொடுக்கப்படும் நிலையே காணப்படுகின்றது.

சீன நிறுவனங்களுக்கு மாற்று மின்சார உருவாக்கம் என்ற கோணத்தில் காணிகளை கொடுப்பது என்பது எதிர்காலத்தில் எவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தும் போன்ற விடயங்கள் தொடர்பலும் எம்மாலும், தூதுவராலும் கருத்துக்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டது. ;
பலாலி விமான நிலையம் தொடர்ந்து சர்வதேச விமான நிலையமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

 ஆனால் அங்குள்ள அதிகாரிகளை அரசாங்கம் இடமாற்றம் செய்கின்றதும், அங்கு உள்ள உபகரங்களையும் அங்கிருந்து அகற்றியுள்ளமை தொடர்பிலும் தூதுவரிடம் தெரியப்படுத்தப்பட்டது.
எந்த நிலை ஏற்பட்டாலும் பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக செயற்படும் என்று உறுதிப்படுத்தியிருந்த தூதுவர் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேசப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

தலைமன்னார் - இராமேஸ்வரத்திற்கு இடையிலான கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதன் ஊடாக வியாபார, வர்த்தக நடவடிக்கைகள் மட்டுமல்லாது வேலைவாய்ப்புக்களையும் அதிகாரிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் நாங்கள் தூதுவரிடம் கூறியிருந்தோம்.
ஏறத்தள ஒரு இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட இலங்கை தமிழ் மக்கள் இந்தியாவில் உள்ளார்கள். அவர்களின் பிள்ளைகள் அங்கு பல்வேறு துறைகளிலும் படித்து பட்டம் பெற்றவர்களாக உள்ளார்கள்.

இவர்களை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வருவதன் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குளை உள்ளிட்ட, வெள்வேறு துறைகளில் உள்ள இடப்பற்றாக்குறைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்விடயம் தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தி, ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தூதுவர் உறுதியளித்தார். இலங்கை விடயம் தொடர்பில் ஜெனீவாவில் வரப்போகும் தீர்மானம் தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது.

 பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
மேலும் 13 ஆவது திருத்தச்சட்டம் தமிழர்களுக்கு போதுமானது இல்லை. சமஸ்ரி முறையிலான ஆட்சி அதிகாரங்கள்தான் எமக்கு தேவை என்றும், அதுதான் எமது நாட்டினை பொறுத்தவரையில் சரியான ஒரு ஆட்சி முறையாக இருக்கும் என்றும் எமது தரப்பால் வலியுறுத்தப்பட்டது.

எதுவுமே இல்லாது இருக்கின்ற சூழ்நிலையை தவிர்த்து, இருக்கின்ற ஒன்றாக உள்ள மாகாண சபையை ஏற்றுக் கொள்ள வேண்டும். தொடர்ந்து அதில் எவ்வாறு அதிகாரங்களை எவ்வாறு அதிகரித்துக் கொள்வது, தேவையான அதிகாரங்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது, இந்த செயற்பாடுகளில் படிப்படியாக எவ்வாறு முன்னேறுவது என்பது தொடர்பில் அவரால் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வது தொடர்பில் இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கும் என்பதை தூதுவர் தெளிவுபடத் தெரிவித்துள்ளார்.
100 கிலோ மீற்றர் தூரம் நாங்கள் நடைபயணம் மேற்கொள்ள வேண்டுமாகா இருந்தால், எங்களுடைய உருவத்தை நிலைநிறுத்தித்தான் பயணிக்க வேண்டும்.

ஒன்றடியாக முழுமையாக பயணிக்க முடியாது. அதே போல்தான் இந்த அதிகார பகிர்வு என்பதும். படிப்படியாக அதிகாரிக்கப்பட வேண்டும். தேவையாக அதிகாரங்கள் பெற்றுக ; கொள்ளப்பட வேண்டும். ஆனால் முதலில் உள்ளதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post