இந்த ஆண்டு வெசாக் பண்டிகை தேசிய நிகழ்வாக நயினாதீவில் மேற்கொள்வதற்கான விசேட கூட்டம் இன்று மாலை அலரி மாலிகையில் இடம்பெறுகின்றது.
வெசாக் பண்டிகை சர்வதேச பண்டிகையாக அறிவிக்கும் நிலையில் இலங்கையில் இந்த ஆண்டு வெசாக்கை தேசிய ரீதியில் ஓர் இடத்தை முதன்மைப்படுத்தி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகை யாழ்ப்பாணம் மாவட்ட நயினாதீவில் மேற்கொள்ள புத்தசாசன அமைச்சு திட்டமிட்டு அதற்கான ஆயத்தக் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு அலரி மாலிகையில் பிரதமர் தலமையில் இடம்பெறுகின்றது.
இதற்கான விசேட ஏற்பாட்டுக் கூட்டம் இன்று இடம்பெறுவதனால் அக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு மாவட்டச் செயலாளருக்கு நேற்று மாலை தொலை நகல் மூலம் அறிவிக்கப்பட்டதற்கு இணங்க மாவட்டச் செயலாளர் அவசரமாக கொழும்பு பயணித்துள்ளார்.
Post a Comment