இந்தியாவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தொடர்பில் மனித உரிமை ஆணையாளரின் கருத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு - Yarl Voice இந்தியாவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தொடர்பில் மனித உரிமை ஆணையாளரின் கருத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு - Yarl Voice

இந்தியாவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தொடர்பில் மனித உரிமை ஆணையாளரின் கருத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு
இந்தியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டள்ள விவசாயிகள் தொடர்பில் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட கருத்துகளிற்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

விவசாயிகளின் ஆர்ப்பாட்டம்  குறித்து சுட்டிக்காட்டிய  ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களிற்கு எதிரான இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் கடும் விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.

இந்திய தலைநகரில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் தொடர்வது தொடர்புபட்டவர்களுடனான கலந்துரையாடல் மூலம் உருவாக்கப்பட்ட கொள்கைகள் சட்டங்களை உறுதிப்படுத்துவதன் அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினர் மத்தியிலான பேச்சுவார்த்தைகள் இந்த நெருக்கடிக்கு உரிமைகளை மதிக்கும் சமமான தீர்விற்கு வழிவகுக்கும் எனவும் மனித உரிமை ஆணையாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.

விவசாயிகளின் போராட்டங்கள் இடம்பெறும் பகுதியில் தொடர்பாடல்களிற்கான வசதிகள் துண்டிக்கப்பட்டமை குடிமை பங்களிப்பிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது,வர்த்தகம் வாழ்வாதாரம் மற்றும் கல்வித்துறைகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது,

சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வது மற்றும் மருத்துவ தகவல்களை பெறுவதற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்பாடல்களிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிற்கு எதிரான நடவடிக்கைகள்  கரிசனை அளிக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள இந்தியா மனித உரிமை ஆணையாளரின் கருத்துக்கள் புறநிலை மற்றும் பக்கச்சார்பற்றவை  என தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post