தமிழ்த் தேசிய கட்சிகளை ஒன்றினைப்பது தொடர்பில் ஆராய்வு - Yarl Voice தமிழ்த் தேசிய கட்சிகளை ஒன்றினைப்பது தொடர்பில் ஆராய்வு - Yarl Voice

தமிழ்த் தேசிய கட்சிகளை ஒன்றினைப்பது தொடர்பில் ஆராய்வுதமிழ் தேசிய கட்சிகளின் அரசிய தலைவர்களை சர்வ மதத்தலைவர்கள் அழைத்து இன்று வவுனியாவில் சந்தித்தனர்.

குறித்த சந்திப்பின் போது தமிழ்த் தேசிய பரப்பில் பயணித்து கொண்டிருக்கும் அனைத்து கட்சிகளையும் எவ்வாறு ஒன்றிணைப்பது தொடர்பிலும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானங்களை நிறைவேற்ற தமிழர் தரப்பு கையாள வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இச்சந்திப்பில் நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ திருஞானசம்பந்த பரமச்சாரிய சுவாமிகள், வேலன் சுவாமிகள், தென்கயிலை ஆதினத்தின் சுவாமிகள், வவுனியா, மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் அதிவணக்கத்துக்குரிய ஆயர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

அரசியல் கட்சிகள் சார்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சுமந்திரன், கலையரசன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரன், வினோநோதரலிங்கம் மறற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறீகாந்தா, சிவாஜிலிங்கம், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post