தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும்: விசேட பூஜையின் பின் சிறீதரன் எம்.பி! - Yarl Voice தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும்: விசேட பூஜையின் பின் சிறீதரன் எம்.பி! - Yarl Voice

தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும்: விசேட பூஜையின் பின் சிறீதரன் எம்.பி!
தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அன்மைக் காலமாக கொரோனா நோயினால் (Covid19) பாதிப்புள்ளாகி சிகிச்சை பெற்று வரும் உலகத் தமிழர் பேரவையின் தலைவரும் தமிழகத்தின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவருமான பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும் என கிளிநொச்சி வாழ் தமிழ் உறவுகளால் விசேட வழிபாடுகள் இன்று கிளிநொச்சி நகர சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று நடைபெற்றது. 

குறித்த பூஜையின் நிறைவின் போதே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசுகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக  தமிழகத்தில் சாத்வீக ரீதியில்  போராட்டத்தில் ஈடுபட்டவர் தான் பழ நெடுமாறன் ஐயா அவர்கள் அவ்வாறு போராட்டங்களில் ஈடுபடும் போது பல முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான பின்னர் எல்லாம் அஞ்சாது ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்த ஒரு மகத்தான மனிதர் அவர். 

இலங்கைக்கு  வருகை தந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் நியாயத்தன்மையை நேரடியாக அறிந்து தமிழகம் சென்று தமிழக மக்களுக்கும் உணர்த்தியவர்.

ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் நெருக்கமாக இருப்பவரும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு குரலாகவும் இருக்கும் பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைந்து எமக்காக அதே கம்பீரத்துடன் மீள குரல் கொடுக்கவேண்டும் எனவும் நாம் ஈழத்திலிருந்து பிரார்த்திக்கிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post