இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது தேசியக் கொடியினை நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் ஏற்றி வைக்க, தொடர்ந்து தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து மத தலைவர்களின் ஆசியுரை , அதிதிகள் உரைகள் என்பன இடம்பெற்றன.
Post a Comment