கொரோனா வைரஸ் தடுப்பூசியை பயன்படுத்துவது மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தலைக்கவசத்தை அணிவதை போன்றது- ஹேமந்த ஹேரத் - Yarl Voice கொரோனா வைரஸ் தடுப்பூசியை பயன்படுத்துவது மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தலைக்கவசத்தை அணிவதை போன்றது- ஹேமந்த ஹேரத் - Yarl Voice

கொரோனா வைரஸ் தடுப்பூசியை பயன்படுத்துவது மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தலைக்கவசத்தை அணிவதை போன்றது- ஹேமந்த ஹேரத்கொரோன வைரஸ் தடுப்பு மருந்து 100 வீதம் பாதுகாப்பை தராது என சுகாதாரசேவைகள் பிரதிபணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போது வழங்கப்படும் தடுப்பு மருந்து கொரோனாவிலிருந்து பாதுகாப்பை வழங்ககூடியது மாத்திரமே என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் எடுக்காவிட்டால் நீங்கள் பாதிக்கப்படமாட்டீர்கள் என்பதன் அர்த்தம் இதுவல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பயன்படுத்துவது மோட்டார் சைக்கிளை செலுத்தும் போது  தலைக்கவசம் அணிவதை போன்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தலைக்கவசம் அணிவது விபத்து இடம்பெற்றால் பாதுகாப்பை வழங்கும் ஆனால் இதன் அர்த்தம் அவர் விபத்தில் சிக்கமாட்டார் என்பதல்ல என தெரிவித்துள்ளார்.

இதனை போன்று தடுப்பு மருந்துகள் பாதுகாப்பை மாத்திரம் வழங்ககூடியவை ஆனால் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பேணவேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post