சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் மாபெரும் மக்கள் போராட்டத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கை அரசை முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு கோப் - குழு உறுப்பு நாடுகள் பரிந்துரைக்கக் கோரியுள்ள நிலையில் தொடர்ச்சியான
அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலமே நீதியைப் பெற முடியும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ அல்லது கலப்புப் பொறிமுறை மூலமாகவோ இலங்கையில் பொறுப்புக்கூறலைக் கையாள எந்தவித வாய்ப்பும் இல்லை என்பதைத் திட்டவட்டமாக சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல அனைவரும் அணிதிரள வேண்டும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த போராட்டம் எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகி பழைய வைத்தியசாலையைச் சென்றடைய உள்ளதாகவும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மாபெரும் போராட்டத்தில் அனைத்து உறவு களையும் கலந்துகொண்டு தங்கள்
ஆதரவை வழங்கி வலுச் சேர்க்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Post a Comment