கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் விபத்து - விசுவமடு பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞன் ஸ்தலத்தில் பலி - Yarl Voice கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் விபத்து - விசுவமடு பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞன் ஸ்தலத்தில் பலி - Yarl Voice

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் விபத்து - விசுவமடு பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞன் ஸ்தலத்தில் பலி
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறிதத் விபத்து சம்பவம் இன்று பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றள்ளது.

புதுக்குடியிருப்பிருந்து பரந்தன் நோக்கி ஒரே திசையில் பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனத்துடன், மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் குறிதத் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மோதியதில் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

கனரக இயந்திரத்தை முந்தி செல்ல முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் விசுவமடு பகுதியை சேர்ந்த 20 வயது குணராஜா ஜெனோயன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலியான இளைஞனின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post